அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப்பச்சன்

Published By: Digital Desk 7

22 Apr, 2024 | 10:47 PM
image

பொலிவுட் சுப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் 'கல்கி 2898 AD  எனும் படத்தில்  ஏற்று நடித்திருக்கும் அஸ்வத்தாமா எனும் கதாபாத்திரத்தின் தோற்ற காணொளியும் புகைப்படமும் வெளியிடப்பட்டிருக்கிறது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் 'கல்கி 2898 AD' திரைப்படத்தில் பொலிவுட் சுப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், 'உலக நாயகன்' கமல்ஹாசன், 'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ்,  பொலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன் மற்றும் திஷா படானி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் பொலிவுட் சுப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் அஸ்வத்தாமா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். புராணமும் அறிவியலும் கலந்த புனைவு கதை காவியமாக தயாராகும் இந்த திரைப்படத்தில் அமிதாபச்சன் ஏற்றிருக்கும் அஸ்வத்தாமா எனும் கதாபாத்திரத்தின் தோற்றத்தை வெளியிடும் நிகழ்வு, வட இந்தியாவில் இருக்கும் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள புனித நகரமான நெமாவார் எனும் இடத்தில் நடைபெற்றது. மகாபாரத இதிகாசத்தில் இடம்பெறும் அஸ்வத்தாமா எனும் கதாபாத்திரம் இன்றளவிலும் இந்த மண்ணில் நடமாடுவதாக மக்களிடத்தில் நம்பிக்கை இருக்கிறது. எனவே நினைவுச் சின்னங்கள் கொண்ட இந்த நெமாவார் நகரில் 'நர்மதா காட்' எனுமிடத்தில் அஸ்வத்தாமா எனும் கதாபாத்திரத்தின் தோற்றத்தை படக் குழுவினர் பிரத்தியேகமாக வெளியிட்டனர்.

இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பிரத்யேக புகைப்படத்தை பதிவிட்டு அமிதாப்பச்சன் குறிப்பிடுகையில், '' இது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. தரமான தயாரிப்பு -நேர்த்தியான முறையில் செயல்படுத்தும் திட்டம்- நவீன தொழில்நுட்பத்தின் வெளிப்பாடு-  இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியது மறக்க இயலாதது என பகிர்ந்து கொண்டார்.

பொலிவுட் சுப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் அஸ்வத்தாமா கதாபாத்திரத்தில் தோன்றும் அவரது தோற்றம் ரசிகர்களிடத்திலும், பார்வையாளர்களிடத்திலும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கிறது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right