சப்மனின் அதிரடியால் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து தொடரை சமப்படுத்தியது நியூஸிலாந்து

22 Apr, 2024 | 05:07 PM
image

(நெவில் அன்தனி)

பாகிஸ்தானுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டி ராவல்பிண்டியில் ஞாயிறன்று (21) நடைபெற்றபோது மார்க் சப்மனின் அதிரடி ஆட்ட உதவியுடன் 7 விக்கெட்களால் நியூஸிலாந்து வெற்றி பெற்றது.

இந்த முடிவுடன் 5 போட்டிகள் கொண்ட தொடர் இப்போதைக்கு 1 - 1 என்ற ஆட்டக் கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற முதலாவது போட்டி 2 பந்துகள் மாத்திரம் வீசப்பட்ட நிலையில் கைவிடப்பட்டது. தொடர்ந்து கடந்த 20ஆம் திகதி 91 ஓட்டங்கள் என்ற குறைந்த வெற்றி இலக்கைக் கொண்ட போட்டியில் பாகிஸ்தான் 7 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது.

ஞாயிறன்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானினால் நிர்ணியிக்கப்பட்ட 178 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 18.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

இரண்டு அணிகளாலும் சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட இந்தப் போட்டியில் எந்த அணியும் வெல்லலாம் என்ற நிலை இருந்தது.

ஆனால், 16ஆவது ஓவரில் சப்மன் குவித்த 21 ஓட்டங்கள் உட்பட 23 ஓட்டங்கள் பெறப்பட்டதால் ஆட்டம் நியூஸிலாந்து பக்கம் திரும்பியது.

42 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்ட சப்மன் 8 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 87 ஓட்டங்களைக் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இதனிடையே 3ஆவது விக்கெட்டில் டீன் ஃபொக்ஸ்க்ரொவ்டுடன் பெறுமதிமிக்க 117 ஓட்டங்களை சப்மன் பகிர்ந்தார்.

ஃபொக்ஸ்க்ரொவ்ட் 31 ஓட்டங்களைப் பெற்றதுடன் ஆரம்ப வீரர்களான டிம் ரொபின்சன் 28 ஓட்டங்களையும் டிம் சீஃபேர்ட் 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் அபாஸ் அப்ரிடி 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களைக் குவித்தது.

ஆரம்ப வீரர்கள் சய்ம் அயூப் (32), அணித் தலைவர் பாபர் அஸாம் (37) ஆகிய இருவரும் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், 3 விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்ந்ததால் பாகிஸ்தான் சிறு தடுமாற்றம் அடைந்தது. (104 - 3 விக்.)

எனினும் மத்திய வரிசையில் இர்பான் கான் (30 ஆ.இ.), ஷதாப் கான் (41) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்து  அணியை சிறந்த நிலையில் இட்டனர்.

பந்துவீச்சில் இஷ் சோதி 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: மார்க் சப்மன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பரிசுத் தொகை...

2024-09-18 16:51:08
news-image

நியூஸிலாந்துடனான முதலாவது டெஸ்ட்: முதலாம் நாள்...

2024-09-18 12:34:13
news-image

நியூசிலாந்துக்கு எதிரான போட்டி : இலங்கை...

2024-09-17 22:27:53
news-image

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியனஷிப் 2024:...

2024-09-14 13:12:09
news-image

சமூக ஊடகங்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை

2024-09-13 19:18:49
news-image

தெற்காசிய கனிஷ்ட ஆண்களுக்கான 100 மீற்றர்...

2024-09-12 21:54:30
news-image

தெற்காசிய கனிஷ்ட, தேசிய கனிஷ்ட சாதனைகளுடன்...

2024-09-12 15:41:14
news-image

ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண 2023...

2024-09-11 20:04:05
news-image

தென் ஆபிரிக்கா ஏ அணிக்கு எதிரான...

2024-09-11 20:17:03
news-image

எய்ட்எக்ஸின் 32ஆவது விளையாட்டு விழாவில் 64...

2024-09-11 18:04:26
news-image

செப்பக் டெக்ரோ உலக சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு...

2024-09-11 12:51:44
news-image

பாரிஸ் பராலிம்பிக்கில் பதக்கம் வென்ற சமித்த...

2024-09-11 12:45:41