ஃபைண்டர் - விமர்சனம்

Published By: Digital Desk 7

22 Apr, 2024 | 10:47 PM
image

தயாரிப்பு : அரபி  புரொடக்ஷன்ஸ்

நடிகர்கள் : சார்லி, வினோத் ராஜேந்திரன், சென்ராயன், நிழல்கள் ரவி, பிரானா மற்றும் பலர்.

இயக்கம் : வினோத் ராஜேந்திரன்

மதிப்பீடு : 2.5 / 5

நாளாந்த வாழ்வாதாரத்திற்கு கூட பொருளாதார வசதி இல்லாமல் கஷ்டப்படுகிறார் பீற்றர். அவருடைய மனைவி மற்றும் மகளுக்கு விரும்பிய வகையில் உணவு அளிக்கக்கூட கஷ்டப்படும் சூழலில் அவரை அணுகும் ஒரு கும்பல் செய்யாத குற்றத்திற்கு பொறுப்பேற்றுக்கொண்டு சிறைக்குச் சென்றால் லட்சக்கணக்கில் உனக்கு பணம் கிடைக்கும். உன்னுடைய குடும்பத்தின் வறுமை நீங்கும். நீ சிறையில் இருக்கும் காலகட்டமும் குறைவுதான். விரைவில் பிணையில் வந்து விடலாம்  என பல்வேறு கவர்ச்சியான வாக்குறுதிகளை அளிக்கிறது. சூழல் காரணமாக வேறு வழி இல்லாமல் சிறைக்குச் செல்ல பீற்றர் ஒப்புக்கொள்கிறார். ஆனால் பீற்றர் சிறைக்கு சென்ற பிறகு அந்த கும்பல் பீற்றரின் மனைவிக்கும், மகளுக்கும் வாக்குறுதி படி பண உதவி செய்யாமல் ஏமாற்றுகிறது. இதனால் மனமடைந்த  பீற்றரின் மனைவி தற்கொலை செய்து கொள்கிறார். மகள் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்.  இந்த தருணத்தில் ஃபைண்டர் என்ற அமைப்பு மூலம் சிறைச்சாலையில் சிறை தண்டனை அனுபவிக்கும் நிரபராதிகள் குறித்து ஆய்வு செய்யும் குழுவிற்கு பீற்றரின் வழக்கு செல்கிறது.

அதன் பிறகு அந்தக் குழு உண்மையை  ஆராய்கிறது.  அதன் பின் என்ன நடக்கிறது? பீற்றர் சிறையிலிருந்து விடுதலை ஆனாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.

வித்தியாசமான சமூகப் பொறுப்புள்ள கதையை யோசித்து வழங்கியதற்காக இயக்குநர் வினோத் ராஜேந்திரனை பாராட்ட வேண்டும்.

பீற்றர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மூத்த நடிகர் சார்லி வழக்கம் போல் மிகையான நடிப்பால் மனதை கவர்கிறார்.  துப்பறியும் நிபுணராகவும், சிறை தண்டனை கைதிகளுக்கு சட்ட உதவி செய்யும் சட்டத் தரணியாகவும் நடித்திருக்கும் இயக்குநர் வினோத் ராஜேந்திரன் இயல்பாக நடித்திருக்கிறார். சென்ராயன் வழக்கம் போல் நன்றாக நடித்து தன் இருப்பை பதிவு செய்கிறார்.

படத்தின் இரண்டாம் பகுதியில் சில காட்சிகள் மீண்டும் மீண்டும் வருவதை தவிர்த்திருந்தால் திரைக்கதை கூடுதல் சுவாரசியமாக இருந்திருக்கும்.

படத்தின் இடம்பெறும் வசனங்களும் மனதை கொள்ளையடிக்கின்றன.  இதன் மூலம் ஃபைண்டர் படம் தனித்துவமான படம் என்பதை நிரூபிக்கிறது.

சிறிய முதலீட்டில் வித்தியாசமான படைப்புகளை உருவாக்கி, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்த முடியும் என்ற பட்டியலில் இந்த ஃபைண்டர் திரைப்படமும் இடம் பிடித்திருக்கிறது.

ஃபைண்டர் - குட்  ஃபால்ட் ஃபைண்டர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நம்மவர் படைப்பு!

2024-05-27 17:20:23
news-image

இறுதி கட்டப் படப்பிடிப்பில் கார்த்தியின் 'வா...

2024-05-27 17:00:55
news-image

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அமரன்' படத்தின் படப்பிடிப்பு...

2024-05-27 16:00:39
news-image

பி டி சார் - விமர்சனம்

2024-05-24 18:05:37
news-image

பொபி சிம்ஹா நடிக்கும் 'நான் வயலன்ஸ்'...

2024-05-24 17:55:21
news-image

விதார்த் நடிக்கும் 'அஞ்சாமை' படத்தின் ஃபர்ஸ்ட்...

2024-05-24 17:51:41
news-image

ஷாருக்கான் சிகிச்சைக்காக கேடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

2024-05-23 22:55:55
news-image

சாமானியன் - விமர்சனம்

2024-05-23 16:34:31
news-image

'என் தாய் மண் மேல் ஆணை...

2024-05-23 16:17:03
news-image

மாற்றுத்திறனாளியான பிள்ளையின் வாழ்வியலை பேசும் 'பிள்ளையார்...

2024-05-23 15:22:38
news-image

'கருடன் திரைப்படத்தை பார்த்து பார்த்து செதுக்கி...

2024-05-22 14:29:12
news-image

'புரட்சித் தமிழன்' சத்யராஜ் கௌரவ வேடத்தில்...

2024-05-21 17:47:04