சிசேரியனில் பிரசவித்த மருமகளை கிரேனில் தூக்கிச் சென்ற மாமியார்..!

Published By: Digital Desk 3

22 Apr, 2024 | 05:03 PM
image

சீனாவில், சிசேரியன் மூலம் பிரசவித்த தனது மருமகளை, அடுக்கு மாடி குடியிருப்பின் லிஃப்ட் பழுதடைந்ததால் வாடகைக்கு கிரேன் அமர்த்தி 7ஆவது மாடியில் உள்ள வீட்டுக்கு தூக்கிச் சென்ற மாமியாரின் செயல் அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் லியோனிங் மாகாணத்தின் ஷென்யாங் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 7வது தளத்தில் வாங் (Wang) எனும் பெண்மணி தன் மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிறைமாத கர்ப்பிணியான வாங்கின் மருமகளுக்கு, மார்ச் மாத இறுதியில் சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து, சமீபத்தில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் வேளையில், அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் லிஃப்ட் பழுதடைந்தது.

இதனால், அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வந்த தனது மருமகள் படிக்கட்டுகளில் ஏற சிரமப்படுவார் என்று மாமியார் வாங் கவலைப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர், மிகப்பெரிய கிரேன் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி, அதில் தனது மருமகளை 7வது மாடியில் உள்ள வீட்டின் பால்கனிக்கு தூக்கிச் சென்றார்.

இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, ஒட்டுமொத்த சீன மக்களை மகிழ்ச்சியிலும், நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்