பெரிட்டோனிட்டிஸ் எனும் அடிவயிற்று வீக்க பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை.

Published By: Digital Desk 7

22 Apr, 2024 | 10:48 PM
image

காய்ச்சல், வாந்தி, அடிவயிற்று வலி, சிறுநீர் வெளியேறும் அளவு குறைந்துவிட்டது, தாகம் எடுக்கிறது, வாயு பிரிவதிலும், மலம் வெளியேறுவதிலும் சிக்கல் இருக்கிறது என்றால், உடனடியாக வைத்தியரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும். ஏனெனில் இந்த அறிகுறிகள் பெரிட்டோனிட்டிஸ் எனப்படும் அடிவயிற்று வீக்க பாதிப்பாக இருக்கலாம்.  இதற்கு உடனடியாக சிகிச்சை பெறாவிட்டால் வயிற்றுப்புண், கணைய பாதிப்பு, கல்லீரல் சுருக்க பாதிப்பு போன்ற பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உயிருக்கு அச்சுறுத்தலை உண்டாக்கும்.

பெரிடோனியம் எனும் பெயரில் எம்முடைய உடலில் மார்பு பகுதிக்கும், இடுப்பு பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரு திசு அடுக்கு உள்ளது. இந்த திசு அடுக்கு பகுதி பாக்டீரியா தொற்று காரணமாக வீக்கடைந்தால், அதனை மருத்துவ மொழியில் பெரிட்டோனிட்டிஸ் என குறிப்பிடுவர். இது அடிவயிற்று பகுதியில் ஏற்படும் தீவிர பாதிப்பாகும்.

சிலர் பெரிட்டோனியல் டயாலிசிஸ் எனும் சிகிச்சை முறையை தொடரலாம். இதன் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். அடி வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தாலோ அடிவயிற்று பகுதியில் வேறு ஏதேனும் காரணங்களால் சத்திர சிகிச்சை செய்யப்பட்டு இருந்தாலும் வயிற்றில் புண் இருந்தாலும் கணையம் அல்லது பித்தப்பையில் வீக்க பாதிப்பு இருந்தாலும் இத்தகைய அடிவயிற்று வீக்க பாதிப்பு உண்டாகும்.

அடி வயிற்றுப் பகுதியில் வீக்கம்,  அதிதீவிர வலி, காய்ச்சல், பசியின்மை, அதீத தாகம், குமட்டல், வாந்தி, வாயு பிரியாமை, மலம் வெளியேறாதிருத்தல், அதிர்ச்சி ஆகிய அறிகுறிகள் ஏற்பட்டால் நீங்கள் அடிவயிற்று வீக்க பாதிப்பிற்கு ஆளாகி இருக்கக்கூடும்.

இதற்கு வைத்தியர்கள் முதலில் குருதி பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட், எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் பரிசோதனை, பெரினோட்டல் பகுதியில் சுரக்கும் பிரத்யேக திரவத்திற்கான பரிசோதனை ஆகியவற்றை மேற்கொள்ள பரிந்துரைப்பர்.

முடிவுகளின் அடிப்படையில் உங்களது சிகிச்சைகள் தீர்மானிக்கப்படும். நவீன மருத்துவ தொழில் நுட்பங்களால் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் இதற்கு முதன்மையான நிவாரணத்தை வழங்குவர். வெகு சிலருக்கு பாதிக்கப்பட்ட திசுவை அகற்றும் பிரத்யேக சத்திர சிகிச்சையை மேற்கொண்,டு நிவாரணம்  அளிப்பர். வெகு சிலருக்கு மட்டுமே பெரிட்டோனியல் டயாலிசிஸ் எனும் சிகிச்சையை மேற்கொள்ள பரிந்துரைப்பர்.

வைத்தியர் : அனந்த கிருஷ்ணன்

தொகுப்பு : அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரத்த நாள பாதிப்பிற்குரிய காரணங்கள் என்ன?

2024-05-28 15:34:49
news-image

எலும்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை...

2024-05-27 16:02:28
news-image

மெனிங்கியோமா எனும் மூளையில் வளரும் கட்டி...

2024-05-24 17:46:17
news-image

வயிற்றில் நீர் கோர்ப்பு எனும் பாதிப்பிற்கு...

2024-05-23 16:37:56
news-image

இரத்த வாந்தி எனும் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும்...

2024-05-22 15:58:35
news-image

மஞ்சள் காமாலை பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2024-05-21 17:47:40
news-image

கல்லீரல் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2024-05-20 17:31:58
news-image

புற்றுநோய் பாதிப்பிற்கு மரபணு பரிசோதனை அவசியமா.?

2024-05-18 18:08:06
news-image

கில்லன் - பாரே சிண்ட்ரோம் எனும்...

2024-05-17 18:20:50
news-image

இலங்கையில் அதிகரிக்கும் உயர் இரத்த அழுத்த...

2024-05-17 15:51:49
news-image

முதுகு தண்டுவடப் பகுதியில் ஏற்படும் நரம்புகளின்...

2024-05-16 17:36:07
news-image

சுருள் சிரை நரம்பு பாதிப்பிற்கு நிவாரணம்...

2024-05-14 20:55:21