(க.கமலநாதன்)

Image result for நாட்டின் துறைமுகங்கள் விற்பனை

தனியார் மயப்படுத்தல் செயற்பாடுகளை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி என்றும் ஆதரிக்காது. அந்த நிலைப்பாட்டில் ஜனாதிபதியும் உறுதியாக உள்ளார். எனவே துறைமுகங்கள் என்றும் விற்பனை செய்யப்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

துறைமுகங்கள் சார்ந்த அனைத்து ஒப்பந்தங்களுமே பிரதான கட்சிகளின் இணக்கப்பட்டின் கீழேயே முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நிதி இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.