உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பை சஜித் பிரேமதாசாவும் ஜே.வி.பி போன்றோரும் அரசியலாக்கப் பார்க்கிறார்கள் - பிள்ளையான்

Published By: Digital Desk 3

22 Apr, 2024 | 04:11 PM
image

உயிர்த்த ஞாயிறு  குண்டு  வெடிப்பை உலகளாவிய ரீதியில் கையாண்ட அமெரிக்கா, அவுஸ்திரேலியா. பொலிஸார் இதனை சரியாக கணித்து ஆராய்ந்து நடந்ததை கண்டுபிடித்து அறிக்கையை சமர்ப்பித்து விட்டு வெளியேறி விட்டார்கள். ஆனால், இலங்கையில் ஒரு பொறுப்பற்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவும்  ஜே.வி.பி போன்ற கட்சிகளும் தற்போது இதனை கையில் எடுத்து அரசியலாக்கப் பார்க்கிறார்கள். மதங்களைப் பின்பற்றுவது சம்பந்தமான ஒரு அறிவு ரீதியாக ஒழுங்குபடுத்தலை எதிர்காலத்தில் உண்டாக்குவதன் மூலம் மதத்தின் பெயரால் இவ்வாறான குண்டு வெடிப்புகளை தவிர்க்க முடியும் என இராஜாங்க கிராமிய வீதி அபிவிருத்தி அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் போது ஒரே நேரத்தில் பல இடங்களில் குண்டு  வெடிப்பை தற்போது அரசியலாக்க பார்க்கிறார்கள் இவர்கள் ஆழமான அறிவை தேடி பார்க்க வேண்டும் இதனை அரசியல் சாயம் பூச முயல்கிறார்கள் எல்லா மதங்களிலும் கடும் போக்கானவர்கள் இருக்கிறார்கள். உலகளாவிய ரீதியில் தடை செய்யப்பட்ட பல இயக்கங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதில் ஒரு கூராகத்தான் ஐ எஸ் ஐ எஸ். தீவிரவாதமும் இருந்தது. பல நாடுகளிலும் பயிற்சி எடுத்த காத்தான்குடியைச் சேர்ந்த சஹரானும் அவரது குழுவினரும் இருந்தனர். இதனை உலகளாவிய ரீதியில் கையாண்ட அமெரிக்கா ஆஸ்திரேலியா பொலிசார் இதனை சரியாக கனித்து ஆராய்ந்து அவர்கள் அறிக்கையை சமர்ப்பித்து விட்டு வெளியேறி விட்டார்கள் ஏனென்றால் அவர்கள் சரியாக நடந்ததை கண்டுபிடித்து விட்டார்கள்.

இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போது இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற அச்சம் நமக்கு உள்ளது. இதற்காக தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும். மதத்தின் பெயரால் நூறாண்டுகளுக்கு மேல் இயங்கும் இந்த வகாபாதத்தை  முறியடிப்பது இலகுவான விடயம் அல்ல இதனை முறியடிப்பதற்கு அதி தொழில்நுட்பம் கூடிய பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்கப்பட வேண்டும்.

நாட்டில் ஏனைய மதத்தவரையும் மதித்து நடக்க வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு இலங்கை போன்ற நாட்டில் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்தால் ஏனைய நாடுகளைப் போல் இலங்கையும் அபிவிருத்தி இலக்கை அடைய முடியும் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41
news-image

நுரைச்சோலை மின்னுற்பத்தி இயந்திரங்கள் மீண்டும் செயற்பட...

2025-02-15 16:34:16
news-image

தம்பகல்ல பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய...

2025-02-15 15:42:37
news-image

மிகவும் பலவீனமான ஆட்சியே இன்று நாட்டில்...

2025-02-15 15:36:36
news-image

கொழும்பு மாவட்டத் தலைவர் பதவியை தனதாக்கிக்...

2025-02-15 14:34:51
news-image

யாழ். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூலகத்தை...

2025-02-15 16:35:56