(நெவில் அன்தனி)
இந்தியாவில் நடைபெற்றுவரும் இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றிவரும் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியில் வலை பந்துவீச்சாளராக கருக்க சன்கேத் இணைந்துள்ளார்.
தென் ஆபிரிக்காவில் பெப்ரவரி மாதம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்காக 4 போட்டிகளில் கருக்க சன்கேத் விளையாடியிருந்தார்.
வலதுகை வேகப்பந்துவீச்சாளரான அவரது வித்தியாசமான பந்துவீச்சுப் பாணி டெல்ஹி கெப்பிட்டல்ஸ் உரிமையாளர்களை வெகுவாக கவர்ந்ததை அடுத்தே அவரை வலை பந்துவீச்சாளராக அவ்வணியினர் இணைத்துக்கொண்டுள்ளனர்.
18 வயதான சன்கேத், லைசியம் சர்வதேச பாடசாலையின் பழைய மாணவரும் கிரிக்கெட் வீரருமாவார்.
கடந்த இரண்டு வருடங்களாக 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியில் இடம்பெற்றுவந்து கருக்க சன்கேத், 16 கனிஷ்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 22 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.
19 வயதுக்குட்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டி ஒன்றில் சன்கேத் 48 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். அதுவே அவரது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM