நாட்டில் இடம்பெறும் பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட விசேட குழுவினரால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றிவளைப்புகளில் ஒரு மாத காலப்பகுதிக்குள் பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த 246 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது , பாதாள உலக குழுத் தலைவர்களான குடு அஞ்சுவின் 26 உதவியாளர்களும் அங்கொடை லொக்காவின் 17 உதவியாளர்களும் வாழைத்தோட்டம் தினுக்கவின் 14 உதவியாளர்களும் கணேமுல்ல சஞ்சீவவின் 13 உதவியாளர்களும் கொஸ்கொடை சுஜீவின் 13 உதவியாளர்களும் பொடி லெசியின் 12 உதவியாளர்களும் தெமட்டகொட சமிந்தவின் 10 உதவியாளர்களும் கஞ்சிபனி இப்ரானின் 10 உதவியாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 246 பேரில் 104 பேர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையில் கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM