சிரியாவில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ரொக்கட் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள அதேவேளை ஈராக்கில் உள்ள தளங்கள் மீது தாக்குதலை மீண்டும் ஆரம்பிக்கப்போவதாக ஈராக்கில் உள்ள ஆயுதகுழுவொன்று தெரிவித்துள்ளது.
சிரியாவின் வடகிழக்கில் உள்ள அமெரிக்காவின் தளமொன்றின் மீது ஈராக்கின் ஜூமார் நகரிலிருந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கார்டியன் தெரிவித்துள்ளது.
பெப்ரவரிக்கு பின்னர் முதல்தடவையாக தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.பெப்ரவரி மாதத்தில் ஈராக் குழுக்கள் அமெரிக்க தளங்களின் மீது தாக்குதல்களை நிறுத்தியிருந்தன.
ஈராக்கிய பிரதமர் அமெரிக்காவிற்கு மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்க செயலளாரை சந்தித்த மறுநாள் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின் போது அமெரிக்க படையினரை ஈராக்கிலிருந்து வெளியேற்றும் விடயத்தில் முன்னேற்றம் ஏற்படாததை தொடர்ந்து மீண்டும் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக ஈராக்கின் ஹெட்டாய்க் ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
சில மணிநேரத்தின் முன்னர் இடம்பெற்றது ஆரம்பமே என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
தடைசெய்யப்பட்ட அமைப்புகள் சிரியாவின் மத்தியில் உள்ள சர்வதேச கூட்டமைப்பின் தளத்தை இலக்குவைத்துள்ளன என ஈராக்கிய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM