பொலிஸார் சட்டத்தை கையிலெடுத்துள்ளனர் உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்கு தயாராகுங்கள் - அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ

Published By: Vishnu

22 Apr, 2024 | 02:18 AM
image

(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பதில் தவிசாளராக நியமிக்கப்பட்டதையடுத்து, உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்பதற்கு எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. யாரோ ஒரு தரப்பினரின் கைப்பாவையாக செயற்படும் பொலிஸார் சட்டத்தை கையிலெடுத்துள்ளனர். உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்கு தயாராக இருக்குமாறு அவர்களை எச்சரிப்பதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

சு.க. தவிசாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பு, டாலி வீதியில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்துக்கு சென்ற போது ஏற்பட்ட பதற்ற நிலைமையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பதில் தவிசாளராக நியமனம் வழங்கப்பட்டதையடுத்து, எமது பணிகளை ஆரம்பிப்பதற்காகவே கட்சி தலைமையகத்துக்கு வருகை தந்தோம். எனினும் கட்சி தலைமையகத்தின் பிரதான நுழைவாயில் மூடப்பட்டுள்ளது. இங்கு விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதால் உட்செல்ல அனுமதிக்க முடியாது என்று பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.

கடந்த 5ஆம் திகதி கோப்புக்கள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரையிலும் பொலிஸார் எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை. ஆனால் மேலும் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக தற்போது பொலிஸார் குறிப்பிடுகின்றனர். தலைமையகத்தின் முதலாவது மாடியிலேயே கோப்புக்கள் காணாமல் போயுள்ளதாக, பதில் செயலாளர் முறைப்பாடளித்துள்ளார்.

எனவே முதலாம் மாடிக்கு செல்ல மாட்டோம் என்றும், ஐந்தாம் மாடியிலுள்ள கேட்போர் கூடத்திலேயே கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் நாம் பொலிஸாருக்கு தெளிவுபடுத்தினோம். இருந்தும் சட்ட விரோதமாக, சட்டத்தைக் கையிலெடுத்துள்ள பொலிஸார் எமக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பொலிஸ் உத்தியோகத்தர்களின் இந்த செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது. இவர்கள் அனைவரையும் உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்கு தயாராக இருக்குமாறு எச்சரிக்கின்றேன். பொலிஸார் பக்கசார்பாகவே செயற்படுகின்றனர். நாம் எமது முறைப்பாட்டினை மீளப் பெறப் போவதில்லை. பொலிஸார் சட்டத்துக்கு முரணாக செயற்படுகின்றனர் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாகாண மட்டத்தில் குற்றவியல் விசாரணைப் பிரிவு...

2025-01-13 18:22:40
news-image

தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்

2025-01-13 18:31:43
news-image

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறைக்கைதிகளை பார்வையிட...

2025-01-13 17:16:39
news-image

மருந்துகள் கொள்வனவு தொடர்பில் கொள்முதல் ஆணைக்குழுவுடன்...

2025-01-13 18:02:21
news-image

இலங்கை மருத்துவ சங்கத்தின் 131வது தலைவராக...

2025-01-13 18:18:35
news-image

நண்பனின் தந்தையின் வங்கி இலத்திரனியல் அட்டையை...

2025-01-13 18:06:54
news-image

பழையசெம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட...

2025-01-13 17:45:25
news-image

இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகள் காப்பாற்றப்படவேண்டும் - ஆளுநர்...

2025-01-13 17:47:46
news-image

சுதந்திரபுரம் பகுதியில் கிணற்றிலிருந்து இளைஞனின் சடலம்...

2025-01-13 18:36:20
news-image

வவுனியாவில் பொங்கலுக்கு பொருட்களை கொள்வனவு செய்வதில்...

2025-01-13 17:11:01
news-image

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவதில் எனக்கு...

2025-01-13 16:54:19
news-image

ஸ்டாலினுடன் செல்பி எடுக்க முண்டியடித்த பாராளுமன்ற...

2025-01-13 16:46:34