உடுவே தம்மாலோக தேரரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் துலானி அமரசிங்க இன்று (23) உத்தவு பிறப்பித்துள்ளார்.

இவர்  மேலதிக ஒரு இலட்ச ரூபா சரீர பிணையில் விடுமுதலை செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும்  மாதம் 5 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிப்பெக்கியை இயக்கியமைக்கு எதிராக பிரதேசவாசிகளால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் இவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

 இந்நிலையில் இவர் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்திருந்த காரணத்தால் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.