தனியார் கடன்வழங்குனர்களுடனான மறுசீரமைப்பில் பின்னடைவுகள் தென்படினும் நம்பிக்கை உண்டு - கிருஷ்ணா ஸ்ரீனிவாசன்

21 Apr, 2024 | 07:17 PM
image

(நா.தனுஜா)

தனியார் கடன்வழங்குனர்களுடனான மறுசீரமைப்பில் பின்னடைவுகள் தென்பட்டாலும், ,இருதரப்பினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

எனவே ,இவ்விடயத்தில் வெகுவிரைவில் தீர்மானமொன்று எட்டப்படுமென எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய, பசுபிக் திணைக்களப் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். 

வொஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் மாதாந்த செய்தியாளர் சந்திப்பில் ,இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நிலைவரம் மற்றும் நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்ட அமுலாக்கம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ,இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தினுள் பிரவேசித்த வேளையில், ,லங்கை மிகமோசமான நிலையிலேயே ,இருந்தது. ,இருப்பினும் தற்போது மீட்சிக்கான ஆரம்ப குறிகாட்டிகள் தென்படுகின்றன. அவற்றை நான் நேர்மறை சமிக்ஞை (பச்சைக்கொடி) என்றே கூறுவேன்.

2023 ,ல் பின்னரைப்பாகத்தில் ஆண்டுக்கு ஆண்டு உண்மை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பெறுமதி 3 சதவீதத்தினால் விரிவடைந்துள்ளது. 2022 செப்டெம்பர் மாதமளவில் 70 சதவீதமாக உச்சத்திலிருந்த பணவீக்கம் கடந்த மார்ச்சில் 0.9 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

2023 ,ல் வெளிநாட்டுக்கையிருப்பின் பெறுமதி 2.5 பில்லியன் டொலர்களால் உயர்வடைந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான ,இணக்கப்பாட்டுக்கு அமைவாக ,இலங்கையால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்திட்டம் மிக அவசியமானதும், வினைத்திறன் மிக்கதும், உரிய பெறுபேற்றைத் தருவதுமான திட்டம் என்பதைக் காண்பிப்பதற்காகவே நான் ,இந்தத் தரவுகளைக் கூறுகின்றேன். முன்நோக்கிச்செல்லும் பாதை மேலும் கடினமானதாக ,இருக்கும். எனினும் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட விடயங்களில் முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது.

நிதிக்கொள்கைவகுப்பு, கையிருப்பின் அளவை மேம்படுத்தல், மீண்டெழும் தன்மையைக் கட்டியெழுப்பல் போன்ற விடயப்பரப்புகளில் ,இன்னமும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியுள்ளது.

அதேபோன்று கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் அடையப்பட்டிருப்பதாகவே கருதுகின்றேன். உத்தியோகபூர்வ கடன்வழங்குனர்களுடனான பேச்சுவார்த்தைகளில் சிறந்த முன்னேற்றம் தென்படுகின்றது. அதேபோன்று தனியார் கடன்வழங்குனர்களுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகள் நேர்மறையானவையாகக் காணப்படுகின்றன.

,இப்பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. எது எவ்வாறெனினும் ,வற்றில் நாம் எவ்விதத்திலும் தலையீடு செய்யமாட்டோம். மாறாக நடப்பவற்றை அவதானிப்பவர்களாக மாத்திரமே ,இருப்போம். பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவோருக்கு அவசியமான ஆலோசனைகளை வழங்குவோம்.

எனவே தனியார் கடன்வழங்குனர்களுடனான மறுசீரமைப்பில் பின்னடைவுகள் தென்பட்டாலும், ,இருதரப்பினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருகின்றனர். எனவே ,வ்விடயத்தில் வெகுவிரைவில் தீர்மானமொன்று எட்டப்படுமென எதிர்பார்க்கின்றேன்.

அதேவேளை ,இச்செயற்திட்டம் எதிர்பார்க்கப்பட்ட விளைவுகளைத் தருகின்றது. ஆனால் முன்நோக்கிச்செல்லும் பாதை ,இன்னமும் கடினமானது என்பதால், நிதியியல் மறுசீரமைப்புக்கள் மற்றும் ஆட்சியியல் நிர்வாகம், ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட கட்டமைப்பு மறுசீரமைப்புக்களை தொடர்ந்து முன்னெடுக்கவேண்டியது மிக அவசியமாகும் என்று வலியுறுத்தினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புழுதியாற்று ஏற்று நீர்பாசனத் திட்டத்தை பார்வையிட்டார்...

2025-03-16 17:35:19
news-image

இசை நிகழ்ச்சியில் வன்முறை ; 6...

2025-03-16 17:13:20
news-image

சமிக்ஞை கட்டமைப்பு செயலிழப்பு ; ரயில்...

2025-03-16 16:37:30
news-image

வெலிகம துப்பாக்கிச் சூடு ; கொழும்பு...

2025-03-16 17:40:18
news-image

கொஹுவலையில் மாணவரின் பணப்பையை திருடிய நபர்...

2025-03-16 17:04:07
news-image

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள்...

2025-03-16 15:55:11
news-image

இடியுடன் கூடிய மழை பெய்யும் -...

2025-03-16 15:40:18
news-image

எரிபொருள் குழாயில் சேதம்

2025-03-16 17:24:44
news-image

வருடம் முழுவதும் மகளிர் தினத்தை கொண்டாட...

2025-03-16 15:50:16
news-image

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பூனாகலை கபரகலை தோட்ட...

2025-03-16 15:19:56
news-image

மட்டக்களப்பில் மீண்டும் மழை ; போக்குவரத்து...

2025-03-16 14:38:39
news-image

கணித, விஞ்ஞான துறையில் தமிழ் மாணவர்களின்...

2025-03-16 14:12:36