ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரான "பயாகலா தோரா"வின் சகா "பயாகலா சுட்டு" பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று சனிக்கிழமை (20) மாலை கலமுல்ல, பயாகல பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவரிடமிருந்து 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கையடக்கத் தொலைபேசிகளையும் களுத்துறை குற்றப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபரை கைது செய்து விசாரணை நடத்தியபோது, களுத்துறை சிறைச்சாலையிலிருந்து "பயாகல தோரா" என்பவருடன் இவர் தொடர்பிலிருந்தமை தெரியவந்துள்ளது.
கையடக்கத் தொலைபேசி ஊடாக பணப் பரிமாற்றம் செய்யும் முறையின் ஊடாக இந்த சந்தேக நபர் இந்த போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது .
48 வயதுடைய சந்தேகநபர் தொடங்கொட, பயாகல, மத்துகம, வெலிப்பன்ன, களுத்துறை போன்ற பிரதேசங்களில் இந்த ஐஸ் போதைப்பொருள் விநியோகித்து வந்துள்ளார் .
இத்துடன் இவர் ஒரு மாதத்திற்கு முன்னர் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM