குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசியை அமைச்சர் டக்ளஸ் யாழில் வழங்கிவைப்பு

21 Apr, 2024 | 05:38 PM
image

நாடளாவிய ரீதியில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தை இன்று (21) யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.

அரிசி வழங்கும் தேசிய நிகழ்வு யாழ் மாவட்டத்தில் மருதங்கேணி பிரதேச செயலகத்தில் அமைச்சரால் இன்று காலை 9.30 மணியளவில் மாவட்ட பதில் அரச அதிபர் பிரதீபனின் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முன்னதாக 2023ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 25 மாவட்டங்களில் சமுர்த்தி பயனாளிகள் உள்ளிட்ட 2.74 மில்லியன் குடும்பங்களை உள்ளடக்கியதாக, ஒரு குடும்பத்துக்காக 10 கிலோ நாட்டரிசியை இரண்டு மாதங்களுக்கு வழங்குவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாக அடையாளம் காணப்பட்ட குறைந்த வருமானம் கொண்டவர்களின் போசாக்கு மட்டத்தைப் பேணுவதற்கு ஏதுவாக இந்த ஆண்டிலும் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பொருத்தமானது எனக் கண்டறியப்பட்டது.

அதற்கிணங்க, சிறிய மற்றும் நடுத்தரளவிலான நெல் ஆலை உரிமையாளர்களை இணைத்து மாவட்டச் செயலாளர்கள் மூலமாக அடையாளம் காணப்பட்டுள்ள குறைந்த வருமானம் கொண்ட 2.74 மில்லியன் குடும்பங்களுக்கு தலா 10 கிலோகிராம் அரிசி வழங்கும் வேலைத்திட்டத்தை இரண்டு மாதங்களுக்கு நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

இதன் அடிப்படையிலேயே இன்றைய தினம் யாழ். மாவட்டத்தில் சம்பிரதாயபூர்வமாக அமைச்சரால் குறித்த அரிசி வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தலை பிற்போடவேண்டுமென்பது ஐக்கிய தேசிய கட்சியின்...

2024-05-29 16:28:15
news-image

ஜனாதிபதி தேர்தலை பிற்போட நாட்டு மக்கள்...

2024-05-29 16:26:18
news-image

முச்சக்கரவண்டியுடன் பஸ் மோதி விபத்து; 03...

2024-05-29 20:36:22
news-image

எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை...

2024-05-29 20:12:26
news-image

இந்நாட்டின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையின் மாற்றத்திற்காக...

2024-05-29 20:06:26
news-image

தோல்வியை மறைக்கவே தேர்தலை பிற்போடத் திட்டம்...

2024-05-29 16:21:18
news-image

அடுத்தடுத்து 4 பேர் பலியாகிய சோகம்;...

2024-05-29 19:48:51
news-image

7 வயது சிறுவனை தலைகீழாக கட்டி...

2024-05-29 19:29:26
news-image

பிரபல்யமானவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்போம் -...

2024-05-29 16:27:11
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 12 பெண்கள் உட்பட...

2024-05-29 18:04:40
news-image

மாலபே, பொரலஸ்கமுவ, மாகும்புர ஆகிய நடுத்தர...

2024-05-29 16:19:38
news-image

26 நாட்களில் 96,890 சுற்றுலாப் பயணிகள்...

2024-05-29 17:18:29