நாடளாவிய ரீதியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு

21 Apr, 2024 | 07:07 PM
image

பெருந்தோட்டத்‍ தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் அடிப்படை நாள் சம்பளத்தை வழங்குமாறு கோரி தொழிலாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் இன்றைய தினமும் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.  

கொட்டகலை 

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக 1700 ரூபாய் வழங்கபட வேண்டும் என வலியுறுத்தி கொட்டகலை நகரில் இன்று (21) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

கொட்டகலை பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அமைப்பாளருமான ராஜமணீ பிரசாத் ஏற்பாட்டில் நூற்றுக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் இந்த போராட்டம் இடம்பெற்றது. 

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாயினை நாட்சம்பளமாக வழங்குமாறு  வலியுறுத்தி கொட்டகலை நகர வர்த்தகர்கள் கடைகள் அனைத்தையும் மூடி கறுப்புக் கொடிகளை பறக்கவிட்டிருந்தனர். 

அக்கரப்பத்தனை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபாவை நாள் சம்பளமாக வழங்குமாறு  வலியுறுத்தி அக்கரப்பத்தனை நகரிலும் இன்று (21) ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஏ.பி.சக்திவேல் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

இதில் அக்கரப்பத்தனை பிரதேச சபையின் முன்னாள் தலைவர்களான இராமன் கோபால், கதிர்செல்வன் மற்றும் அக்கரப்பத்தனை, டயகம, மன்றாசி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். 

இந்நிலையில், தமது கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் அக்கரப்பத்தனை நகர வர்த்தகர்கள் தமது கடைகள் அனைத்தையும் பூட்டி, கறுப்பு கொடிகளை பறக்கவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நானுஓயா 

பெருந்தோட்ட ‍தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை வலியுறுத்தி நானுஓயா நகரில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) போராட்டம்  இடம்பெற்றது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாயை வழங்குமாறு அரசாங்கம் கம்பனிகளிடம் கோரிக்கை விடுத்ததுடன் அமைச்சரவையிலும் இதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனினும் கம்பனிகள் 1700 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்க முடியாதென தொடர்ச்சியாக கூறிவருவதுடன் அரசாங்கத்தின் தீர்மானத்தையும் ஏற்க மறுத்து வருகின்றன.

இது தொடர்பில் தொழில் அமைச்சு, முதலாளிமார் சம்மேளனம் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் இடையில் இடம்பெற்ற பல சுற்றுப் பேச்சுகளும் தோல்வியிலேயே முடிந்தது.

இதற்கு எதிராக நானுஓயா நகர வர்த்தகர்கள் தங்களின் வர்த்தக நிலையங்களை இரு மணி நேரம் அடைத்து, இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். 

மேலும் பெருமளவான தொழிலாளர்களும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தலையில்  கறுப்புப் பட்டி அணிந்தும் நகரெங்கும் கறுப்புக் கொடிகளை பறக்கவிட்டும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

அத்துடன் 'தொழிலாளர்களின் கோரிக்கைகளை புறக்கணிக்காதீர்', 'சம்பள விடயத்தில் இழுத்தடிப்பு வேண்டாம்', 'தொழிலாளர்களை ஏமாற்றாதீர்கள்' போன்ற அரசுக்கு எதிரான வசனங்கள் குறிப்பிடப்பட்ட பதாதைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நானுஓயா பொலிஸார் இப்போராட்டத்துக்கான பாதுகாப்பினை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

மலையகம் எங்கும் போராட்டங்கள் 

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக 1700 ரூபாய் வழங்குமாறு வலியுறுத்தியும் பெருந்தோட்டக் கம்பனிகளின் அராஜக போக்கை கண்டித்தும் மலையக நகரங்களில் இன்று (21) போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு சிவில் அமைப்புகள் மற்றும் நகர வர்த்தகர்கள் தரப்பில் இருந்தும் பேராதரவு வழங்கப்பட்டது.

நகர் பகுதிகளில் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டதுடன், நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன், கொட்டகலை, டிக்கோயா, பொகவந்தலாவை, மஸ்கெலியா, டயகம, அக்கரப்பத்தனை, நானுஓயா, இராகலை உள்ளிட்ட நகரங்களில் இ.தொ.காவின் ஏற்பாட்டில் சம்பள உயர்வுக்கான அழுத்தம் கொடுக்கும் போராட்டங்கள் இடம்பெற்றன.

பதுளை மாவட்டத்தில் பதுளை, பசறை, ஹாலிஎல, ஹப்புத்தளை உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்றன.

கண்டி மாவட்டத்தில் நாவலப்பிட்டி, புசல்லாவ, மடுல்கலை, உளுகங்கை, ரங்கல உள்ளிட்ட பகுதிகளிலும், இரத்தினபுரி மாவட்டத்தில் பலாங்கொடை பின்னவல, கஹாவத்தை, இறக்குவானை உள்ளிட்ட நகரங்களிலும், மாத்தளை நகரில் மற்றும் களுத்துறை மத்துகம பகுதியிலும், அவிசாவளை உள்ளிட்ட நகரங்களிலும் போராட்டங்கள் இடம்பெற்றன.

இ.தொ.காவின் அரசியல் செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள், தொழிலாளர்கள், செயற்பாட்டாளர்கள் பலர் இந்த போராட்டங்களில் பங்கேற்றிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தலில் புத்திசாலித்தனமான தீர்மானம் எடுப்பது நாட்டு...

2024-05-24 22:31:14
news-image

மரங்கள் விழும் ஆபத்து இருந்தால் 117...

2024-05-24 22:10:06
news-image

பதுளையில் இருந்து கொழும்புக்கு செல்லும் வீதியில்...

2024-05-24 20:48:18
news-image

கோப்பாயில் கசிப்பு விற்பனை; பெண் கைது

2024-05-24 19:34:10
news-image

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மரம்...

2024-05-24 18:51:41
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 4 பெண்கள் உட்பட...

2024-05-24 19:08:03
news-image

சிறந்த தலைவர் ஒருவர் செயற்படக்கூடிய விதம்...

2024-05-24 18:09:43
news-image

வாகரை மாங்கேணி கடலில் நீராடிய ஒருவர்...

2024-05-24 19:09:42
news-image

இலங்கையை விசேட கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்குமாறு...

2024-05-24 17:47:03
news-image

புத்தளம் எலுவாங்குளம் பகுதியில் முதலையால் மக்கள்...

2024-05-24 19:08:54
news-image

நுவரெலியாவில் புதிய தேநீர் திருவிழா 2024

2024-05-24 17:42:31
news-image

திடீரென உடைந்து வீழ்ந்த திவுலபிட்டிய வெசாக்...

2024-05-24 17:14:25