மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலோடு தொடர்புடைய சூத்திரதாரிகளை கைது செய்யுமாறு கோரி பொதுமக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மட்டக்களப்பு காந்தி பூங்காவின் முன்னால் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்று 5 வருட நினைவுதினத்தை முன்னிட்டு சூத்திரதாரிகளை கைது செய்ய கோரி சமூக செயற்பாட்டாளர்கள் ஆர்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்ததையடுத்து காந்தி பூங்காவின் முன்னால் பொதுமக்கள் அரசியல்வாதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், மதகுருமார்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் ஒன்றுதிரண்டனர்.
'அரசே கொலையாளிகளை மறைக்காதே', 'குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகளை கைது செய்', 'சர்வதேசமே மெனத்தை கலைத்து ஈஸ்ரர் குண்டுவெடிப்பின் நீதியை தா', 'வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்', 'ஐ.நாவில் வழங்கிய வாக்குமூலம் என்னாச்சு', '5 ஆண்டு கடந்தும் அவலத்துக்கு நீதி இல்லையா?' போன்ற சுலோகங்கள் ஏந்தியும், கோஷம் எழுப்பியும் சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர், போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM