உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு யாழ். மரியன்னை தேவாலயத்தில் நினைவஞ்சலி

21 Apr, 2024 | 10:17 AM
image

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான 5ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சில தேவாலயங்களில் நினைவுகூரப்பட்டது.

அந்த வகையில், யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்திலும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் இன்று (21) இடம்பெற்றன.

இதன்போது, கடந்த 2029 ஏப்ரல் 21 அன்று தேவ ஆராதனையில் ஈடுபட்டிருந்தபோது உயிர் நீத்தவர்களுக்கு ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், தேவாலய பிரதான மணி ஒலிக்கப்பட்டு கூட்டுத் திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண மறைமாவட்ட பங்கு குரு முதல்வர் ஜெயரட்ணம் அடிகளார் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.

அதனை தொடர்ந்து, உயிர்நீத்தவர்களை நினைவுகூரி பிரார்த்திக்கும் முகமாக மெழுகுவர்த்திகளும் ஏற்றப்பட்டன. 

இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பெருமளவினர் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல...

2024-05-20 21:41:51
news-image

ஈரானிய ஜனாதிபதி மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும்...

2024-05-20 21:23:18
news-image

இராணுவத்திடம் குடும்பமாக சரணடைந்தவர்களின் குழந்தைகளிற்கு என்ன...

2024-05-20 20:27:33
news-image

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்க...

2024-05-20 20:23:55
news-image

"பொருளாதாரப் பரிமாற்ற சட்டமூலம்" மற்றும் "அரச...

2024-05-20 20:15:47
news-image

புத்தளம் மாவட்டத்தில் 8,780 குடும்பங்கள் பாதிப்பு;...

2024-05-20 19:25:10
news-image

மழையுடன்  டெங்கு  பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு...

2024-05-20 19:14:21
news-image

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த மேலும்...

2024-05-20 19:44:16
news-image

கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேக...

2024-05-20 18:33:41
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 14 பெண்கள் உட்பட...

2024-05-20 19:44:40
news-image

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியுடன் இணக்கப்பாட்டுக்கு...

2024-05-20 18:16:34
news-image

விமான தபால் சேவை மூலம் அனுப்பி...

2024-05-20 19:45:37