மஹாவலி கங்கையில் நீராடச் சென்ற 18 வயது மாணவி நீரில் மூழ்கி உயிரிழப்பு 

21 Apr, 2024 | 09:45 AM
image

மஹாவலி ஆற்றில் நீராடச் சென்ற 18 வயதுடைய மாணவி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டி பல்லேகலை பிரதேசத்தைச் சேர்ந்த இந்த  மாணவி உறவினர் வீடொன்றுக்கு வந்திருந்த போது உறவினர்களுடன் மஹாவலி ஆற்றில் நீராடச் சென்றுள்ளார். 

கன்னோருவ பிரதேசத்தில் உள்ள இந்த மஹாவலி கங்கையில் நீராடியபோதே இந்த மாணவி நீரில் மூழ்கியுள்ளார். 

அவ்வேளை, உறவினர்கள் அவரை காப்பாற்ற  முயன்றபோதும் முடியாமல் போயுள்ளது. பின்னர், அயலவர்களின் உதவியுடன் மாணவியை மீட்டு பேராதனை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையிலேயே அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.

பல்லேகலை பிரதேசத்தைச் சேர்ந்த அருன்திகா பிரசாதினி என்ற 18 வயதுடைய மாணவியே உயிரிழந்தவர் ஆவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில்  கட்டுகஸ்தோட்டை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய அபிவிருத்தி திட்டங்கள் எமது ஆட்சியிலேயே...

2025-01-20 23:14:03
news-image

மக்கள் செல்வாக்கை மதிப்பீடு செய்வதற்காகவே அநாவசிய...

2025-01-20 15:13:19
news-image

போரில் காயமடைந்த இராணுவ வீரர்களுக்கான மருத்துவ...

2025-01-20 23:15:45
news-image

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அரசியல்...

2025-01-20 16:04:19
news-image

பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நான்கு...

2025-01-20 22:16:47
news-image

ஓடும் ரயிலின் இயந்திரத்தில் தீ விபத்து

2025-01-20 21:22:53
news-image

யாழில் 108 கிலோ கஞ்சாவுடன் நால்வர்...

2025-01-20 20:33:04
news-image

ஊடகத்துறையின் அபிவிருத்திக்காக ஊடக நிறுவனமொன்று நிறுவப்படும்...

2025-01-20 16:25:38
news-image

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற...

2025-01-20 19:04:54
news-image

மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவனின் மறைவுக்கு...

2025-01-20 23:15:14
news-image

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

2025-01-20 17:25:36
news-image

சிவனொளிபாத மலைக்குச் சென்றிருந்த வெளிநாட்டுப் பிரஜை...

2025-01-20 16:27:53