(நெவில் அன்தனி)
டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் சனிக்கிழமை (20) நடைபெற்ற இந்த வருடத்திற்கான 35ஆவது இண்டியன் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 68 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
பவர் ப்ளேயில் அதிக ஓட்டங்களைக் குவித்து சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஹைதரபாத், ஒரே ஓவரில் 3 விக்கெட்கள் உட்பட 4 விக்கெட் குவியலைப் பதிவுசெய்த தமிழகத்தைச் சேர்ந்த தங்கராசு நடராஜனின் துல்லியமான பந்துவீச்சின் உதவியுடன் இலகுவாக வெற்றிபெற்றது.
இந்த வெற்றியுடன் தனது 7 போட்டிகளில் 5ஆவது வெற்றியைப் பதிவுசெய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் நிலையில் 10 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 266 ஓட்டங்களைக் குவித்தது.
இண்டியன் பிறீமியர் லீக் வரலாற்றில் அதிகூடிய மொத்த எண்ணிக்கையான 287 ஓட்டங்களைக் குவித்து சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஹைதரபாத் இன்றைய தினம் மற்றொரு சாதனையை நிலைநாட்டியது.
பவர் ப்ளேயில் (முதல் 6 ஓவர்கள்) விக்கெட் இழப்பின்றி 125 ஓடட்ங்களைக் குவித்ததன் மூலம் பவர் ப்ளேயில் அதிகூடிய மொத்த எண்ணிக்கையைக் குவித்தற்கான சாதனையை நிலைநாட்டடியது.
றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 2017ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் குவித்த 105 ஓட்டங்களே இதற்கு முன்னர் பவர் ப்ளேயில் பெறப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாக இருந்தது.
அவுஸ்திரேலியாவின் 2022 உலகக் கிண்ண ஹீரோ ட்ரவிஸ் ஹெட், இளம் இந்தியரான அபிஷேக் ஷர்மா ஆகிய இருவரே பவர் ப்ளேயில் 125 ஓட்டங்களைப் பகிர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதரபாத்துக்கு சாதனையை ஏற்படுத்திக்கொடுத்தனர்.
இதன் காரணமாக சன்ரைசர்ஸ் ஹைதரபாத் 300 ஓட்டங்களைக் கடந்து மற்றொரு சாதனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அடுத்த 14 ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 7 விக்கெட்களை இழந்து 131 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
எவ்வாறாயினும் அவர்கள் இருவரும் 6.2 ஓவர்களில் 131 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்த நிலையில் அபிஷேக் ஷர்மா ஆட்டம் இழந்தார்.
12 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்ட அபிஷேக் ஷர்மா 2 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 49 ஓட்டங்களைக் குவித்தார்.
அடுத்துவந்த ஏய்டன் மார்க்ராம் ஒரு ஓட்டத்தை மாத்திரம் பெற்று ஆட்டம் இழந்தார்.
மறுபக்கத்தில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ட்ரவிஸ் ஹெட் மொத்த எண்ணிக்கை 154 ஓட்டங்களாக இருந்தபோது ஆட்டம் இழந்தார்.
32 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்ட ட்ரெவிஸ் ஹெட் 11 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 89 ஓட்டங்களை விளாசினார்.
ஹென்றிச் க்ளாசென் 8 பந்துகளில் 15 ஓட்டங்களுடன் அதே மொத்த எண்ணிக்கையில் ஆட்டம் இழந்தார்.
இந் நிலையில் நிட்டிஷ் குமார் ரெட்டி, ஷாபாஸ் அஹ்மத் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
நிட்டிஷ் குமார் ரெட்டி 37 ஓட்டங்களைப் பெற்றதுடன் அவரைத் தொடர்ந்து அபுதுல் சமாத் 13 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.
ஷாபாஸ் அஹ்மத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 29 பந்துகளில் 2 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் உட்பட 59 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 55 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
267 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 199 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
ப்ரித்வி ஷா முதல் 4 பந்துகளில் தொடர்ச்சியாக பவுண்டறிகளை அடித்து 16 ஓட்டங்களைக் குவித்தபோதிலும் ஐந்தாவது பந்தில் ஆட்டம் இழந்தார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சாளர்களுக்கு சிரமத்தைக் கொடுக்காத டேவிட் வோர்னர் ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். (25 - 2 விக்.)
எனினும் ஜேக் ப்ரேசர் மெக்கேர்க், அபிஷேக் பொரெல் ஆகிய இருவரும் நிதானம் கலந்து வேகத்துடன் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் 84 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
ஜேக் ப்ரேசர் மெக்கேர்க் 18 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 5 பவுண்டறிகள், 7 சிக்ஸ்களுடன் 65 ஓட்டங்களை விளாசித் தள்ளினார். (109 - 3 விக்.)
மொத்த எண்ணிக்கை 135 ஒட்டங்களாக இருந்தபோது அபிஷேக் பொரெல் 22 பந்துகளில் 42 ஓட்டங்களைப் பெற்றார்.
துடுப்பாட்டத்தில் அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 16 ஓட்டங்களை மாத்திரம் பெற்று வெளியேறியதைத் தொடர்ந்து லலித் யாதவ் (7) களம் விட்டகன்றார்.
அதன் பின்னர் டெல்ஹி கெப்பிட்டல்ஸின் வெற்றி வெகு தொலைவுக்கு சென்று விட்டது.
19ஆவது ஓவரில் அக்சார் பட்டேல் (6), அன்ரிச் நோக்யா (0), குல்தீப் யாதவ் (0) ஆகிய மூவரை தங்கராசு நடராஜன் ஆட்டம் இழக்கச் செய்ததுடன் நிட்டிஷ் குமார் ரெட்டியின் கடைசி ஓவரின் முதல் பந்தில் ரிஷாப் பான்ட் 44 ஓட்டங்களுடன் கடைசியாக ஆட்டம் இழந்தார்.
பந்துவீச்சில் தங்கராசு நடராஜன் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நிட்டிஷ் குமார் ரெட்டி 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மயான்க் மார்க்கண்டே 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
ஆட்டநாயகன்: ட்ரவிஸ் ஹெட்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM