நீதிமன்றுக்கு செல்வது குறித்து 29ஆம் திகதிக்கு பின்னர் தீர்மானிப்போம் - பேராசிரியர் ரோஹண பியதாச 

21 Apr, 2024 | 07:18 AM
image

ஆர்.ராம்

எதிர்வரும் 29ஆம் திகதி தேர்தல்கள் திணைக்களத்தின் முடிவின் பின்னர் நீதிமன்றத்துக்குச் செல்வது குறித்து நாம் தீர்மானிப்போம் என்று சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் பேராசிரியர் ரோஹண பியதாச தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சரதீ துஷ்மந்த மித்திரபால தேர்தல்கள் ஆணைக்குழுவில் எமது தரப்பின் நிருவாக அங்கத்தவர்கள் உள்ளிட்ட பதவி நிலைகளை அறிவித்துள்ளார்.

அதேநேரம், சந்திரிகா தலைமையில் சட்ட விரோதமாக கூடிய தரப்பினரும்  தமது சட்ட விரோதமான தெரிவுகளை தேர்தல்கள் திணைக்களத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இந்நிலையில் தேர்தல்கள் திணைக்களம் எதிர்வரும் 29ஆம் திகதி உரியவாறான பதிலளிப்புக்களை வழங்கவுள்ளது. அதனடிப்படையில் தான் நாம் அடுத்தகட்டம் தொடர்பில் தீர்மானிக்கவுள்ளோம்.

தேர்தல்கள் திணைக்களத்தால் தீர்வினை வழங்க முடியாதுவிட்டாலோ, அல்லது நீதிமன்றத்துக்கு பரிந்துரைத்தாலோ அதனைப் பின்பற்றுவதாகவே தற்போதைய தீர்மானமாக உள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஷ்டிப்பு...

2026-05-12 15:32:05
news-image

சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல்...

2026-05-12 14:58:15
news-image

பேராசிரியர் வித்யாநிதி எம்.எஸ். மூக்கையா காலமானார்

2026-05-12 15:29:22
news-image

அம்பலாந்தோட்டையில் ஒருவர் வெட்டிக் கொலை ;...

2026-05-12 14:07:29
news-image

முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி...

2026-05-12 14:10:27
news-image

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு ஊர்தி...

2026-05-12 13:40:55
news-image

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார்...

2026-05-12 13:26:51
news-image

பெலாரஸுக்கு புறப்படுகிறார் அமைச்சர் விஜித்த ஹேரத்

2026-05-12 13:28:09
news-image

கடும் மழையினால் மட்டு. மண்டூர் -...

2026-05-12 13:23:34
news-image

யாழில் காணி விடுவிப்பு தொடர்பில் ஆளுநர்...

2026-05-12 13:08:37
news-image

யாழ்.போதனாவில் அரச பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள்...

2026-05-12 12:52:31
news-image

மஹியங்கனையில் துப்பாக்கிச் சூடு – பெண்...

2026-05-12 12:48:27