அருணா செல்லத்துரையின் 'அடங்காப்பற்று வன்னியில் ஆதிக்காலத் தமிழர் வரலாறு' நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை 25 ஆம் திகதி மாலை 5 மணிக்கு கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் வரவேற்புரையை ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி நிகழ்த்தவுள்ளதோடு தலைமையுரையை பேராசிரியர்.சி.பத்மநாதன் நிகழ்த்தவுள்ளார்.

நூலின் நயவுரையை வரலாற்றுத்துறை சிறப்பு கலைமாணி ஜெகதீசன் கோபிநாத்தும் , தொல்லியல் ஆர்வலர் வீரசிங்கம் பிரதீபனும், நன்றியுரை நூலாசிரியர் அருணா செல்லத்துரையும் நிகழ்த்தவுள்ளனர்.

இலங்கைத்தமிழர்களின் ஆதிகால வரலாற்றைக் கூறும் வகையில் 200 இற்கும் மேற்பட்ட தொல்லியல் சின்னங்களை இந்நூல் உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.