மறுசீரமைப்புக்களினால் இலங்கையின் நிதி நிலைமை ஸ்திரமடைந்துள்ளது - பாரிஸ் கிளப்

21 Apr, 2024 | 07:22 AM
image

(இராஜதுரை ஹஷான்)

கடன் மறுசீரரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவதைப் போன்று இலங்கையின் கடன் நிலைபேறான தன்மைக்கும் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம்.தற்போதைய மறுசீரமைப்புக்களினால் இலங்கையின் நிதி நிலைமை ஸ்திரமடைந்துள்ளது.என பாரிஸ் கிளப்பின் இணை தலைவரும் பிரான்ஸ் பல்தரப்பு விவகாரம்,வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி கொள்கை திணைக்களத்தின் உதவி செயலாளர் விலியம் ரூஸ் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவில் வொஷிங்டனில் இடம்பெறும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அரையாண்டு வசந்தகால மாநாட்;டு;ட்டில் கலந்துக் கொண்டுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க பரிஸ் கிளப்,ஒபெக் நிதியம்,சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய இராச்சியத்தின் முகவரமைப்பு உட்படச் சர்வதேச அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் அதன் பிரதிநிதிகளுடன் வெள்ளிக்கிழமை (19) இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவுக்கும், பரிஸ் கிளப்பின் இணை தலைவரும் பிரான்ஸ் பல்தரப்பு விவகாரம்,வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி கொள்கை திணைக்களத்தின் உதவி செயலாளர் விலியம் ரூஸிற்கும் இடையிலான சந்திப்பின் போது உத்தியோகப்பூர்வ கடன் கடன் வழங்குநர் குழு மற்றும் ஏனைய தரப்பினருடனான பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தன்மை குறித்து  கலந்துரையாடப்பட்டது.

கடன் மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவதைப் போன்று இலங்கையின் கடன் நிலைபேறான தன்மைக்கும் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம்.தற்போதைய மறுசீரமைப்புக்களினால் இலங்கையின் நிதி நிலைமை ஸ்திரமடைந்துள்ளது.ஆகவே பொருளாதார மறுசீரமைப்புக்களை மீளாய்வு செய்யாமல் முன்னெடுப்பது அத்தியாவசியமானது என விலியம் ரூஸ் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் ஒபெக் நிதியத்தின் தலைவர் அப்துல்  ஹமீட் அல்கலீபாவுக்கும்,நிதி இராஜாங்க அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட அபிவிருத்தி செயற்திட்ட பணிகளை முன்னெடுப்பதற்கும்,முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளுக்கு நிதி ஒத்துழைப்பு பெற்றுக்கொள்வது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய இராச்சிய முகவரான்மை (யுஎஸ்எஐடி)  பிரதி உதவி நிர்வாக அதிகாரி அஞ்சலி கொரியுடன்  கௌரிற்கும் இடையிலான சந்திப்பில்; இலங்கையின் பல்துறை அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்துக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதாக  அஞ்சலி கொரி உறுதியளித்துள்ளார்.

பொருளாதார மீட்சிக்காக இலங்கை முன்னெடுத்த தீர்மானங்கள் குறுகிய காலத்தில் வெற்றி பெற்றுள்ளதாகவும்,தற்போதைய மறுசீரமைப்பு மற்றும் அதனுடனான முன்னேற்றங்களைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மருந்து உற்பத்தி திறனை துரிதமாக அதிகரிக்க...

2025-01-18 15:55:31
news-image

உள்ளூராட்சி தேர்தலை காலம் தாழ்த்த முயன்றால்...

2025-01-18 15:56:17
news-image

புங்குடுதீவில் குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

2025-01-18 18:22:23
news-image

சம்மாந்துறையில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய...

2025-01-18 18:15:19
news-image

2026இல் மறுமலர்ச்சியின் தைப்பொங்கலாக கொண்டாடுவோம் -...

2025-01-18 22:11:38
news-image

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவிலில் தேசிய...

2025-01-18 17:13:58
news-image

வருமான வரி பரிசோதகர்கள் என கூறி...

2025-01-18 16:41:05
news-image

களுத்துறையில் பாலமொன்றுக்கு அருகில் குப்பை கூளங்களில்...

2025-01-18 16:55:31
news-image

கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் போதைப்பொருளுடன்...

2025-01-18 16:02:19
news-image

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தால் விவசாயிகள்...

2025-01-18 16:09:52
news-image

இ. போ. சபையின் பஸ் சாரதி,...

2025-01-18 15:59:24
news-image

மாத்தறையில் ஹெரோயின், துப்பாக்கியுடன் இருவர் கைது

2025-01-18 15:34:10