சந்தானம் நடிக்கும் 'இங்க நான் தான் கிங்கு' படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Published By: Digital Desk 7

21 Apr, 2024 | 07:24 AM
image

நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான 'வடக்குப்பட்டி ராமசாமி' திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் இந்தத் திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியை பெறவில்லை என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இருப்பினும் சந்தானம் 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தின் வெற்றிக்குப் பிறகு தன் சம்பளத்தை உயர்த்தி விட்டார்.

இருந்தாலும் அவரது நடிப்பில் தயாராகி வரும் 'இங்க நான் தான் கிங்கு' எனும் படத்தின் வணிகரீதியான வெற்றிக்குப் பிறகு அவர் வாங்கும் சம்பளம் குறித்த திரையுலகினரின் விமர்சனம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'இங்க நான் தான் கிங்கு' எனும் திரைப்படத்தில் சந்தானம், பிரியாலயா, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, பால சரவணன், முனீஸ் காந்த், மாறன், லொள்ளு சபா சுவாமிநாதன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஓம் நாராயண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுஷ்மிதா அன்புச் செழியன் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஜி என் அன்புச் செழியன் வழங்குகிறார்.

இப்படத்தின் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளியாகி, ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் மே மாதம் பத்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மே மாதம் கோடை விடுமுறை என்பதாலும், சந்தானம் நடித்திருக்கும் காமெடி படம் என்பதாலும், இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பு இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்