எம்மில் சிலருக்கு உடலில் உள்ள தோல் பகுதியில் அரிப்பு ஏற்படும். பிறகு சில நாட்களுக்குள் தானாக சரியாகிவிடும். ஆனால் சிலருக்கு தோலில் அரிப்பு ஏற்பட்டு, அப்பகுதி தடித்து விடும்.
மேலும் இது சில தினங்களுக்குள் மறையாது. ஆறு வாரங்களுக்கு மேல் தொடர்ந்து நீடிக்கும். இதனை மருத்துவர்கள் நாட்பட்ட தோலரிப்பு பாதிப்பு என விவரிக்கிறார்கள். இதற்கு மருத்துவர்களை சந்தித்து முறையான சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்.
ஒவ்வாமையின் காரணமாக எம்முடைய தோல் பகுதியில் அலர்ஜி பாதிப்பு ஏற்பட்டு இத்தகைய தோல் அரிப்பு பாதிப்பு ஏற்படுகிறது. சிலருக்கு இதனால் அவர்களுடைய நாளாந்த கடமைகளில் பாரிய அசௌகரியம் ஏற்படுகிறது. குறிப்பாக தூக்கத்தை சீர்குலைக்கிறது. இதனால் தோல் அரிப்பு ஆறு வாரங்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
உடலில் கை, கால், முகம் போன்ற பகுதிகளில் அரிப்பு ஏற்படுவது, அரிப்பு ஏற்பட்ட இடத்தில் தோலில் நிறமாற்றம் ஏற்படுவது, சிலருக்கு அரிப்பு என்பது தீவிரமாகிவிடும், அரிப்பு ஏற்பட்ட பகுதியில் வலியும், வீக்கமும் ஏற்படும். இதனால் மன அழுத்தம் உருவாகும். இது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவர்களை சந்தித்து அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதன் போது மருத்துவர்கள் உங்களுடைய அண்மைக்கால உணவு முறை மற்றும் உணவு பட்டியலை பற்றி விரிவாக கேட்டு அறிவர். சிலருக்கு மட்டும் ரத்த பரிசோதனையை மேற்கொள்ளுமாறு பரிந்துரைப்பர். ஏனெனில் ஒவ்வாமை காரணமாகவே இத்தகைய தோல் அரிப்பு ஏற்படுகிறது.
உங்களுடைய உடலில் ஒவ்வாமையை தூண்டும் காரணிகள் எது என்பதை துல்லியமாக அவதானிக்க பல வினாக்களை மருத்துவர்கள் கேட்பர். அதன் பிறகு பாதிப்பு நாள்பட்ட தோல் அரிப்பு என உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு, அவை மீண்டும் மீண்டும் ஏற்படாதிருக்க நவீன மருத்துவ தொழில் நுட்பங்களால் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் முதன்மையான நிவாரணத்தை வழங்குவர். மேலும் உங்களுடைய நோய் எதிர்ப்பு ஆற்றலின் செயல்பாடு குறித்த ஆய்வை மேற்கொண்டு அதனை சீராக வைப்பதற்கான உணவு முறை மற்றும் வாழ்க்கை நடைமுறையை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் பரிந்துரைப்பர்.
டொக்டர் தீப்தி
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM