நடிகர் கவினின் சம்பளத்தை மேலும் உயர்த்துமா 'ஸ்டார்'..!?

Published By: Digital Desk 7

21 Apr, 2024 | 07:25 AM
image

நடிகர் கவின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'டாடா' எனும் திரைப்படத்திற்கு பிறகு தன்னுடைய சம்பளத்தை கோடிக்கணக்கில் உயர்த்திய நடிகர் கவின் நடிப்பில் உருவாகி இருக்கும் 'ஸ்டார்' மே மாதம் பத்தாம் திகதியன்று வெளியாகிறது.  நடிகர் கவினின் சம்பளத்தை 'ஸ்டார்' படம் மேலும் உயர்த்துமா.. ! என்பது இப்படம் வெளியான பிறகு உறுதியாக தெரியவரும்.

'பியார் பிரேமம் காதல்' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் இளன் இயக்கத்தின் உருவாகி இருக்கும் 'ஸ்டார்'  எனும் படத்தில் கவின், மலையாள நடிகர் லால், பொலிவுட் நடிகை அதிதி பொஹங்கர், பிரீத்தி உன்னிமுகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சிங்கிள் ட்ராக், மேக்கிங் வீடியோ ஆகியவை வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் மே மாதம் பத்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது.

இதனிடையே 'டாடா' எனும் வெற்றி படத்திற்குப் பிறகு நடிகர் கவின் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் என்பதாலும், இளன் -கவின் -யுவன் என மூன்றெழுத்து திறமைசாலிகளின் கூட்டணி ஒன்றிணைந்திருப்பதாலும் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செல்லப்பிராணியை தேடி இரு சிறார்களின் பயணத்தை...

2024-05-28 16:52:03
news-image

ரசிகர்களுக்கு இரட்டை பரிசை அளிக்கும் விஜய்

2024-05-28 16:10:02
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'காதலிக்க நேரமில்லை'...

2024-05-28 16:02:09
news-image

உருவ கேலிக்கு துணை போயிருக்கும் இசைப்புயல்...

2024-05-28 06:02:25
news-image

கார்த்தி - அரவிந்த்சாமி இணையும் 'மெய்யழகன்'

2024-05-28 06:02:57
news-image

நடிகர் துருவா சர்ஜா நடிக்கும் 'மார்டின்'...

2024-05-28 06:05:33
news-image

நம்மவர் படைப்பு!

2024-05-27 17:20:23
news-image

நடிகர் உதய் கார்த்திக் நடிக்கும் 'ஃபேமிலி...

2024-05-28 06:06:27
news-image

விக்கன் வேதம் பற்றி பேசும் 'தி...

2024-05-28 06:07:10
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-05-28 06:08:04
news-image

இறுதி கட்டப் படப்பிடிப்பில் கார்த்தியின் 'வா...

2024-05-27 17:00:55
news-image

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அமரன்' படத்தின் படப்பிடிப்பு...

2024-05-27 16:00:39