கண் பாதிப்புகளுக்கான நவீன சிகிச்சை

Published By: Digital Desk 7

20 Apr, 2024 | 04:47 PM
image

ம்மில் பலரும் போட்டிகள் நிறைந்த இன்றைய சூழலில் தங்களது வாழ்க்கை நடைமுறையை முற்றிலுமாக மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் நாளாந்த வாழ்க்கையில் கணினியின் பயன்பாடு என்பது இன்றியமையாததாகிவிட்டது. இதனால் டிஜிட்டல் திரைகளை உற்று நோக்கும் கால அவகாசம் என்பது அதிகரித்திருக்கிறது. இதனால் கண்களுக்கு பாதிப்பு விரைவிலேயே ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக எம்மில் சிலருக்கு அவர்களுடைய கண்களின் மையப் பகுதியில் இருக்கும் கருவிழி திடீரென சுருக்கமடைந்து, பாதிப்பை ஏற்படுத்துகிறது.‌ இதனை மருத்துவ மொழியில் மயோசிஸ் என குறிப்பிடுவர். இதற்கு தற்போது முழுமையான பலனை வழங்கக்கூடிய நவீன சிகிச்சைகள் அறிமுகமாகி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இயல்பான தசை சுருக்கம் ஏற்படுவது போல்  கண்களின் மையப் பகுதியில் இருக்கும் கருவிழிக்கான பிரத்யேக தசைகளிலும் சுருக்க பாதிப்பு ஏற்படுகிறது. சிலருக்கு கருவிழியின் மென்மையான தசை பகுதிகளில் ஏற்படும் பக்கவாதம் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படும். வேறு சிலருக்கு போதை பொருட்களை பாவிப்பதால் இத்தகைய பாதிப்பு உண்டாகிறது.

வாந்தி, சுவாசிக்கும் போது அசௌகரியம், மங்கலான பார்வை, குமட்டல், தலைவலி, குழப்பம்.. ஆகிய அறிகுறிகள் ஏற்பட்டால், உங்கள் கண்களில் உள்ள கருவிழியில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்பதனை அவதானித்து, மருத்துவரை சந்தித்து உடனடியாக ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.

தூரப்பார்வை பாதிப்பு, விற்றமின் டி குறைபாடு, மூளையில் உண்டாகும் ரத்தக் கசிவு, போதை பொருட்களுக்கு அடிமையாதல், பிறவி குறைபாடு, கண்களில் ஏற்படும் வீக்கம் காரணமாக இத்தகைய பாதிப்பு உண்டாகிறது என மருத்துவர்கள் விளக்கமளிக்கிறார்கள்.

கண்களுக்கு பிரத்யேகமான பரிசோதனை செய்து இதன் பாதிப்பை துல்லியமாக அவதானிப்பர். மேலும் சிலருக்கு கழுத்து, மார்பு, மூளை ஆகிய பகுதிகளில் சிடி ஸ்கேன் அல்லது எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனையும் மேற்கொள்ளுமாறு பரிந்துரைப்பர்.

முடிவுகளின் அடிப்படையில் இவர்களுக்கு கண்களில் ஏற்பட்டிருக்கும் சிதைவை சீர்படுத்துவதற்கான சத்திர சிகிச்சை மேற்கொண்டு முதன்மையான நிவாரணத்தை வழங்குவர். வேறு சிலருக்கு கீமோதெரபி, ரேடியேசன் தெரபி போன்ற சிகிச்சை முறைகளை பயன்படுத்தியும் நிவாரணம் அளிப்பர். போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தால் அதிலிருந்து மறுவாழ்வு பெறுவதற்கான சிகிச்சையும் உடன் இணைந்து வழங்குவர். வேறு சிலருக்கு தசை சுருக்கத்தை நீக்குவதற்கான பிரத்யேக சிகிச்சை முறையை அளித்து நிவாரணம் வழங்குவர். மேலும் சிலருக்கு நவீன தொழில்நுட்பங்களால் கண்டறியப்பட்ட சொட்டு மருந்து மூலம் இதற்கு நிவாரணம் தருவர்.

டொக்டர் அமர் அகர்வால்

தொகுப்பு : அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெட்ஸோர்ஸ் எனும் தோலில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2024-05-29 17:38:38
news-image

இரத்த நாள பாதிப்பிற்குரிய காரணங்கள் என்ன?

2024-05-28 15:34:49
news-image

எலும்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை...

2024-05-27 16:02:28
news-image

மெனிங்கியோமா எனும் மூளையில் வளரும் கட்டி...

2024-05-24 17:46:17
news-image

வயிற்றில் நீர் கோர்ப்பு எனும் பாதிப்பிற்கு...

2024-05-23 16:37:56
news-image

இரத்த வாந்தி எனும் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும்...

2024-05-22 15:58:35
news-image

மஞ்சள் காமாலை பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2024-05-21 17:47:40
news-image

கல்லீரல் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2024-05-20 17:31:58
news-image

புற்றுநோய் பாதிப்பிற்கு மரபணு பரிசோதனை அவசியமா.?

2024-05-18 18:08:06
news-image

கில்லன் - பாரே சிண்ட்ரோம் எனும்...

2024-05-17 18:20:50
news-image

இலங்கையில் அதிகரிக்கும் உயர் இரத்த அழுத்த...

2024-05-17 15:51:49
news-image

முதுகு தண்டுவடப் பகுதியில் ஏற்படும் நரம்புகளின்...

2024-05-16 17:36:07