மஸ்கெலியாவில் கோடரியால் தாய் மற்றும் சகோதரனை தாக்கியதாக கூறப்படும் இளைய சகோதரன் எதிர்வரும் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கோடரி தாக்குதலில் 72 வயது உடைய தாய் மற்றும் 44 வயது உடைய சகோதரன் படுகாயமடைந்த நிலையில் கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச் சம்பவம் புதன்கிழமை மாலை 4 மணிக்கு இடம் பெற்றுள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.புஸ்பகுமார தெரிவித்தார்.
பொறுப்பதிகாரி மேலும் கூறுகையில்,
இச் சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்ஷீக் தோட்ட எமலீனா பிரிவில் நேற்று மாலை 4 மணிக்கு இடம் பெற்றுள்ளது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் 119 பொலிஸ் அவசர அழைப்புக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு அதிகாரி மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு சந்தேக நபரர் கைது கைது செய்யப்பட்துடன், தாக்குதலுக்குள்ளான இருவரை 1990 அம்புலன்ஸ் ஊடாக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (19) ஆஜர்படுத்தபட்ட போது எதிர் வரும் 24 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், இக்கால கட்டத்தில் சந்தேக நபரை மண நோயாளர் வைத்திய அதிகாரி முன்நிலைபடுத்தி வைத்திய அறிக்கை பெறுமாறு நீதவான் பணித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM