உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் யார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது – உண்மை மூடிமறைக்கப்படுவதாக கத்தோலிக்க சமூகம் கருதுகின்றது – சமூகம் மற்றும் மதத்திற்கான நிலையத்தின் ஆராய்ச்சி குழு அறிக்கை

Published By: Rajeeban

20 Apr, 2024 | 10:34 AM
image

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த எச்சரிக்கைககள் புறக்கணிக்கப்பட்டமையும் தடையற்ற விதத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையும் நீதிவழங்குவது குறித்து அரசாங்கத்தின் அக்கறையின்மை அலட்சியமும் உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பது குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளதாக சமூகம் மற்றும் மதத்திற்கான நிலையத்தின்centre for society and religion ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை  வெளியிட்டுள்ள   சமூகம் மற்றும் மதத்திற்கான நிலையத்தின்ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது

மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மூன்று ஆடம்பர ஹோட்டல் ஒரு விடுதி மற்றும் வீடொன்றை இலக்குவைத்து  2019 ஏப்பிரல் 21ம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களை இலங்கையில் யுத்தத்தின் பின்னர் இடம்பெற்ற ஈவிரக்கமற்ற படுகொலை என தெரிவிக்கலாம்.

ஆண்டவனின் முழங்காலின் கீழ் நின்றுகொண்டிருந்த தங்களின் உயிர்த்த ஞாயிறு காலை உணவை அருந்திக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர் பலர் மிகவும் ஆபத்தான காயங்களினால் பாதிக்கப்பட்டனர்.உள உடல்காயங்கள்.

எண்ணிக்கை அடிப்படையில் அந்த தாக்குதல் 314 உயிர்களை பறித்தது 600 பேர் காயங்களால் பாதிக்கப்பட்டனர் இவர்களில் 45 சிறுவர்களும் உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 40 வெளிநாட்டவர்களும் உள்ளனர்-வெளிநாட்டவர்கள் பாதிக்கப்பட்டதால் இது இந்த துயரம் குறித்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்தது.

பாதிக்கப்பட்ட பலர் இன்னமும் சிகிச்சை பெற்றுவருகின்றனர் சத்திரசிகிச்சைக்கு தங்களை உட்படுத்திவருகின்றனர் அவர்கள் கடும் மன அழுத்தத்திற்குள்ளாகியுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் கறுப்புபக்கங்களை என்றும் இலங்கையின் வரலாற்றிலிருந்து அழித்துவிடமுடியாது.

பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் நீதிக்காக குரல்கொடுத்துவரும் அதேவேளை தங்களின் அளவிட முடியாத இழப்பை இன்னமும் துயருடன் நினைவுகூர்ந்தவண்ணமுள்ளனர்.

2024 ஏப்பிரல் 21ம் திகதி உயிர்த்தஞாயிறுதாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்ற நிலையில் இன்னமும் நீதி நிலைநாட்டப்படவில்லை.

பாதிக்கப்பட்ட அனைவரும் நீதி நிலைநாட்டப்பவேண்டும் இந்த விவகாரத்திற்கு முடிவுகாணவேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

இந்த தாக்குதல் இடம்பெற்ற மறுநாள்; ஜஹ்ரான் ஹாசிம் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பே இந்த தாக்குதலிற்கு காரணம் என இலங்கை அரசாங்கம் குற்றம்சாட்டியிருந்தது.

இந்த தாக்குதல் இடம்பெற்று ஒருவாரத்தின் பின்னர் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன என்டிஜே என்ற அமைப்பே இந்த தாக்குதலிற்கு முக்கிய காரணம் என தெரிவித்து அந்த அமைப்பையும் ஜமாத்தே மிலாத்து இப்ராஹிம் என்ற அமைப்பையும் தடை செய்தார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து ஆராயும்போது இலங்கையின் அரசாங்கம் எவ்வளவு பாரிய பாதுகாப்பு தவறை இழைத்தது என்பதை புறக்கணிக்க முடியாது.

கத்தோலிக்க திருச்சபை சமூகத்தையும் மனித உரிமை சமூகத்தையும் சேர்ந்த பலர் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பான விடயங்கள் மூடிமறைக்கப்படுவதாக கருதுகின்றனர்.

புலனாய்வு அமைப்பினருக்கு நீண்டகாலமாக தீவிரவாதிகள் குறித்து தகவல் தெரிந்திருந்தது எனவும் தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற முன்கூட்டியே தகவல்கள் கிடைத்திருந்தது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயர் அதிகாரிகளிற்கு கூட இது குறித்த விடயங்கள் தெரிந்திருந்தன என்ற விபரங்களும் சந்தேகநபர்களுக்கும் புலனாய்வு பிரிவினருக்கும் இடையில் தொடர்பிருந்தது என்ற விடயங்களும் தெரியவந்துள்ளன.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த எச்சரிக்கைககள் புறக்கணிக்கப்பட்டமையும் தடையற்ற விதத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையும் நீதிவழங்குவது குறித்து அரசாங்கத்தின் அக்கறையின்மை அலட்சியமும் உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பது குறித்த கேள்விகளை எழுப்புகின்றன.

சமீபத்தில் வெளியான சனல்4 வீடியோ உயிர்அதிகாரியொருவருக்கும் ராஜபக்ச அரசாங்கத்திற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து வெளிப்படுத்தியுள்ளது.

எனினும் இந்த விடயங்கள் குறித்து மேலதிக விசாரணைகள் அவசியம் 

தாக்குதலிற்கு வழிவகுத்த மற்றுமொரு காரணம் அந்த நாட்களில் நிலவிய அரசியல் ஸ்திரமின்மை 

அரசமைப்பு சதி முயற்சியின் பின்னர் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் காணப்பட்ட மோசமான உறவு தேசிய பாதுகாப்பு சாதனங்களை பலவீனப்படுத்தியதுடன் சட்டவிரோதமான நோக்கங்களிற்கு வழிவகுத்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொடங்கொடையில் வீடொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம்

2025-01-15 10:45:40
news-image

கொழும்பில் சில பகுதிகளுக்கு நீர்வெட்டு

2025-01-15 10:30:14
news-image

துர்நாற்றம் வீசும் பேர வாவியை சுத்தம்...

2025-01-15 09:59:06
news-image

யாழ். வல்வெட்டித்துறையில் நடைபெற்ற மாபெரும் பட்டத்திருவிழா!

2025-01-15 10:39:04
news-image

இன்றைய வானிலை

2025-01-15 06:15:45
news-image

நிகழ்நிலை தளங்களில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள்...

2025-01-14 19:21:46
news-image

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று...

2025-01-15 01:36:26
news-image

இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு...

2025-01-14 19:58:50
news-image

இலங்கையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை தமிழக...

2025-01-14 19:39:54
news-image

நாளொன்றுக்கு 2500 கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை...

2025-01-14 19:55:32
news-image

எமது ஆட்சியை மீள திருப்புவதற்கு எந்த...

2025-01-14 21:47:39
news-image

13 இல் கைவைக்க நாங்கள் முனையவில்லை...

2025-01-14 19:36:45