பேசாலை மக்களின் எதிர்பார்ப்புகள் வீண்போகாது - அமைச்சர் டக்ளஸ் உறுதியளிப்பு!

21 Apr, 2024 | 07:26 AM
image

பேசாலை மக்களின் எதிர்பார்ப்புகள் நிச்சயம் நிறையு செய்து தரப்படும் எனவும்   மக்களின் கோரிக்கையான பேருந்து நிலையம், தபாலகம்,  மீன் சந்தை ஆயுவேத வைத்திய நிலையம்  உள்ளிட்ட மக்களது அவசிய தேவைகள் அடங்கிய வளாகம் ஒன்றை அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்துவதற்காகவும்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பேசாலை வெற்றி மாதா ஆலயத்தில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அமைச்சர் மக்களின் நலன்கள் முன்னிறுத்தப்பட்டதாகவே செயற்பாடுகள் ஒவ்வொன்றும் இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

இன்று  சனிக்கிழமை (20) காலை மன்னார் மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட அமைச்சர் குறித்த பகுதி மக்களது வேண்டுகோளுக்கிணைய அமைவிடம்  தொடர்பில் நேரில் ஆராய்ந்தார்.   

குறிப்பாக மன்னார் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்வதும் அந்தப் பிரச்சினைகளுக்கு வழங்கக் கூடிய தீர்வுகள் குறித்து கலந்துரையாடுவதுமே அமைச்சரின் இந்த விஜயத்தின் நோக்கமாக இருந்தது.   

இந்நிலையில் மன்னார் நகருக்கு வருகை தந்த அமைச்சர்  முதலில் பேசாலை நகரப்பகுதியில் பேருந்து நிலையம் மற்றும் நவீன சந்தை தொகுதி தபால் நிலையம், அமைப்பது தொடர்பில் ஆராய்ந்தார்.

குறிப்பாக பேசாலை நகர் மத்தியிலுள்ள கடற்றொழில் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான காணியில் பேருந்து நிலையம், சந்தை தொகுதிதை, தபால் நிலையம், ஆய்ர்வேத வைத்தியசாலை அமைப்பதற்கான ஏதுநிலைகள் குறித்து ஆராயுமாறு துறைசார் தரப்பினருக்கு அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகள்...

2024-05-30 02:40:48
news-image

யாழில் மாணவிகளை தாக்கிய குற்றச்சாட்டில் கைதாகி...

2024-05-30 02:36:34
news-image

மாகாண சுகாதாரத்துறை நிர்வாகம் இறுக்கமாக செயற்பட...

2024-05-30 02:31:15
news-image

யாழ் பொது நூலகத்தின் கதையின் ஏரியும்...

2024-05-30 01:49:12
news-image

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும்...

2024-05-30 01:21:30
news-image

தேர்தலை பிற்போடவேண்டுமென்பது ஐக்கிய தேசிய கட்சியின்...

2024-05-29 16:28:15
news-image

ஜனாதிபதி தேர்தலை பிற்போட நாட்டு மக்கள்...

2024-05-29 16:26:18
news-image

முச்சக்கரவண்டியுடன் பஸ் மோதி விபத்து; 03...

2024-05-29 20:36:22
news-image

எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை...

2024-05-29 20:12:26
news-image

இந்நாட்டின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையின் மாற்றத்திற்காக...

2024-05-29 20:06:26
news-image

தோல்வியை மறைக்கவே தேர்தலை பிற்போடத் திட்டம்...

2024-05-29 16:21:18
news-image

அடுத்தடுத்து 4 பேர் பலியாகிய சோகம்;...

2024-05-29 19:48:51