வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக் குருமணியும், உற்சவகாலப் பிரதமகுருவுமான சிவஸ்ரீ வை.மு.பரமசாமிக்குருக்கள் முத்துக்குமாரசாமிக்குருக்கள் வெள்ளிக்கிழமை (19) தனது 73 ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் காலமானார்.
சிவாகம நெறிகளை நன்கு கற்றுத்தேர்ந்தவரும், சிறந்த வேத வித்தகருமான இவர் இந்தியாவில் குருகுலக் கல்வியையும், பட்டப் படிப்பையும் நிறைவு செய்திருந்தார். அத்துடன் பல ஆலயங்களின் குடமுழுக்குகளைச் சிறப்புற நெறிப்படுத்திய பெருமையும் இவரைச்சாரும்.
குருமணியின் இறுதிக்கிரியைகள் இன்று சனிக்கிழமை (20) பிற்பகல் 2 மணியளவில் கோப்பாய் வடக்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று, அதனைத் தொடர்ந்து கோப்பாய் கந்தன்காடு இந்து மயானத்தில் தகனக் கிரியைகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM