உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர் மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவைக்கு ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம்

Published By: Digital Desk 3

20 Apr, 2024 | 08:50 AM
image

(நா.தனுஜா)

உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்கள் தொடர்பில் மாத்திரமன்றி, இவ்விடயத்தில் நீதி நிலைநாட்டப்படுவதை மறுதலிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் உள்ளடங்கலாக இலங்கை அரசாங்கங்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளையும் பகுத்தறிவுடன் நோக்குமாறு ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையிடமும், கத்தோலிக்க ஆயர்கள் பேரவையிடமும் கடிதம் மூலம் வேண்டுகோள்விடுத்துள்ளது.

இதுகுறித்து ஹொங்கொங் நாட்டைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கைக்கான பொறுப்பதிகாரி பாஸில் பெர்னாண்டோவினால் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் திறந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கான நீதியை நிலைநாட்டுவதற்கு நீங்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்துடனும், பாதிக்கப்பட்ட தரப்பினரின் குடும்பத்தாருடனும், மிகமோசமான இக்குற்றத்தின் விளைவாக துயரத்துக்குள்ளான கத்தோலிக்க சமூகம் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த இலங்கை மக்களுடனும் எமது உடனிற்பை வெளிப்படுத்துகின்றோம். 

உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளுக்கு மத்தியிலும், நீதிக்கான கோரிக்கையை செவிமடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. இவ்விடயத்தில் உங்களது பதற்றத்தை நாம் புரிந்துகொள்கின்றோம். 

அதேவேளை இக்குற்றம் தொடர்பில் மாத்திரமன்றி, இவ்விடயத்தில் நீதி நிலைநாட்டப்படுவதை மறுதலிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் உள்ளடங்கலாக இலங்கை அரசாங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் பகுத்தறிவுடன் நோக்குமாறு உங்களிடம் வலியுறுத்துகின்றோம். 

இக்குற்றம் மற்றும் இதற்குரிய நீதி மறுதலிக்கப்படுவதன் பின்னணியில் வேறுபல முக்கிய விடயங்கள் பிணைந்திருப்பது தற்போது தௌ;ளத்தெளிவாகப் புலப்பட்டிருக்கும் நிலையில், இது ஒட்டுமொத்த நாட்டுமக்களினதும் நலனில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படுகொலையுடனும் (உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்), அதன்பின்னரான நிலைவரத்துடனும் தொடர்புடைய சகல கோணங்களையும் ஆராய்ந்த மனித உரிமைகள் அமைப்பு என்ற ரீதியிலும், இலங்கையில் நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் சட்ட ஆட்சி சீர்குலைவைத் தொடர்ந்து அவதானிப்போர் என்ற அடிப்படையிலும், உடனடியாகக் அவதானம் செலுத்தப்படவேண்டிய இந்த சமூகவியல் சீர்குலைவை உங்களது கவனத்துக்குக் கொண்டுவருகின்றோம்.

அதற்கமைய இவ்விடயத்தில் சில உடனடி மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும், அவற்றை முழுமையாக அடைந்துகொள்வதற்கு நீங்கள் உடனிற்கவேண்டும் எனவும் கருதுகின்றோம். அத்தோடு மிகமோசமான இந்நிலைவரத்தைக் கையாள்வதற்கு நீங்கள் ஏனைய மதங்களைச் சார்ந்தோர் மற்றும் நன்நோக்குடைய மக்களின் ஆதரவையும் கோரவேண்டும்.

 அதன்படி, நாட்டில் முறையான சட்ட அமுலாக்கத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். அதனை அடைந்துகொள்வதற்குரிய அரசியல் ரீதியான தன்முனைப்பையும், இயலுமையையும் அதிகாரமுடையோர் கொண்டிருக்கவேண்டும். பிரச்சினையின் ஓரங்கமாக இருக்கும் தலைமைத்துவத்தில் மாற்றங்களை செய்து, நிலைமாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முனைப்பைக் கொண்டிருப்போரிடம் அந்தப் பொறுப்பை வழங்குவதன் மூலம் இதனைச் செய்யலாம்.

அடுத்ததாக குற்றவியல் விசாரணைப்பிரிவின் நடவடிக்கைகளை மீள் ஒருங்கிணைப்புச் செய்யவேண்டும். அதனூடாக இக்கட்டமைப்புக்குள் நிலவும் குறைபாடுகள் மற்றும் பிழைகளை சீரமைக்கலாம். அதுமாத்திரமன்றி புலனாய்வுப்பிரிவினர்மீது சுமத்தப்பட்டிருக்கும் மிகமோசமான குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, உரியவாறான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். 

சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்பில் ஏற்பட்டிருக்கும் எதிர்மறை நிலைப்பாட்டை மாற்றியமைப்பதற்கு ஏதுவான நியாயமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். நீதிமன்றக்கட்டமைப்பின் சுயாதீனத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25
news-image

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின்...

2025-02-12 18:24:55
news-image

பாடசாலை பிரதி அதிபரின் விடுதியில் திருட்டு...

2025-02-12 18:18:16
news-image

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 139 பேருக்கு...

2025-02-12 18:24:06
news-image

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைவராக முன்னாள்...

2025-02-12 18:13:43
news-image

தையிட்டி விகாரை விடயத்தில் சட்ட ஆட்சி...

2025-02-12 17:19:27
news-image

சம்மாந்துறையில் வீடொன்றினுள் புகுந்து 2 பவுண்...

2025-02-12 16:49:09
news-image

மட்டக்களப்பில் வயலுக்குள் புகுந்து விளைபயிர்களை நாசப்படுத்திய...

2025-02-12 16:34:58
news-image

எதிர்பார்ப்பின் மேடை நிகழ்வு “டவர் நாடக...

2025-02-12 18:12:00
news-image

புறக்கோட்டை களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3...

2025-02-12 16:21:35
news-image

முன்னாள் எம்.பி திலீபன் இந்தியாவில் கைது

2025-02-12 15:55:39
news-image

200 அடி பள்ளத்தில் விழுந்து கார்...

2025-02-12 15:40:01