சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ்

Published By: Vishnu

19 Apr, 2024 | 11:59 PM
image

(நெவில் அன்தனி)

லக்னோவ் எக்கானா கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 34ஆவது போட்டியில் நடப்பு சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸை 8 விக்கெட்களால் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் வெற்றிகொண்டது.

க்ருணல் பாண்டியாவின் துல்லியமான பந்துவீச்சு, அணித் தலைவர் கே. எல். ராகுல், குவின்டன் டி கொக் ஆகியோரின் அரைச் சதங்கள் என்பன லக்னோவுக்கு 4ஆவது வெற்றியை ஈட்டிக்கொடுத்தது.

ஆனால் அணிகள் நிலையில் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் தொடர்ந்தும் 6ஆவது இடத்தில் இருக்கிறது.

அப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 177 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் 19 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

குவின்ட்ன் டி கொக், கே. எல். ராகுல் ஆகிய இருவரும் 15 ஓவர்களில் 134 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

குவின்டன் டி கொக் 43 பந்துகளில் 54 ஓட்டங்களைப் பெற்றார்.

மொத்த எண்ணிக்கை 161 ஓட்டங்களாக இருந்தபோது கே.எல். ராகுல் ஆட்டம் இழந்தார்.

அவர் 53 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 82 ஓட்டங்களைக் குவித்தார்.

அடுத்து ஜோடி சேர்ந்த நிக்கலஸ் பூரன் (23 ஆ.இ.), மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் (8 ஆ.இ.) ஆகிய இருவரும் வெற்றிக்கு தேவையான எஞ்சிய ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட சென்னை சுப்பர் கிங்ஸ் கடும் சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது.

சென்னை துடுப்பாட்டத்தில் 5 வீரர்களே 15 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

முன்வரிசையில் ரச்சின் ரவிந்த்ரா ஓட்டம் பெறாமலும் ருத்துராஜ் 17 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.

ஆரம்ப வீரர்களில் ஒருவரான அஜின்கியா ரஹானே ஓரளவு திறமையை வெளிப்படுத்தி 36 ஓட்டங்களைப் பெற்றார்.

ஷிவம் டுபே (3), சமீர் ரிஸ்வி (1) ஆகிய இருவரும் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழக்க சென்னை சுப்பர் கிங்ஸ் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. (90 - 4 விக்.)

எனினும் ரவிந்த்ர ஜடேஜாவும் மொயீன் அலியும் 6ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை கௌரவமான நிலையில் இட்டனர்.

மொயீன் அலி 20 பந்துகளில் 3 சிக்ஸ்களுடன் 30 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து ஜடேஜாவும் எம்.எஸ். தோனியும் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 176 ஓட்டங்களாக உயர்த்தினர்.

ரவீந்த்ர ஜடேஜா 57 ஓட்டங்களுடனும் தோனி 9 பந்துகளில் 28 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் க்ருணல் பாண்டியா 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: கே.எல். ராகுல்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜடேஜாவின் துல்லியமான பந்துவீச்சு, கில், ஐயர்,...

2025-02-07 17:05:20
news-image

புனித சூசையப்பர் அணியின் 11 வயது...

2025-02-07 13:22:16
news-image

இந்துக்களின் சமர் - நாணய சுழற்சியில்...

2025-02-07 11:38:55
news-image

14ஆவது இந்துக்களின் கிரிக்கெட் சமர்  யாழ்....

2025-02-06 19:07:08
news-image

100ஆவது டெஸ்டில் விளையாடும் திமுத் கருணாரட்ன...

2025-02-06 14:37:36
news-image

முதலில் துடுப்பாட்டத்திலோ, பந்துவிச்சிலோ ஈடுபட்டால் அதில்...

2025-02-05 20:39:54
news-image

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அரங்கிலேயே சர்வதேச...

2025-02-05 20:26:28
news-image

ரி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி...

2025-02-05 13:38:39
news-image

துடுப்பாட்ட சாதனையுடன் பந்துவீச்சிலும் அசத்திய அபிஷேக்...

2025-02-03 18:09:33
news-image

19 வயதின் கீழ் மகளிர் உலகக்...

2025-02-03 15:26:27
news-image

இந்துக்களின் சமருக்கு 3ஆவது வருடமாக ஜனசக்தி...

2025-02-03 15:05:26
news-image

சகல போட்டிகளிலும் வெற்றியீட்டி உலக சம்பியனானது...

2025-02-02 18:27:38