சர்வோதயா சமூக மேம்பாட்டு சமூக நலத் திட்டத்தின் ஸ்தாபகர் ஏ.டி.அரியரத்ன திடீர் மரணம் எமக்கு வருத்தமளிக்கிறது. துன்புறும் அப்பாவி மக்களுக்கு சமூக ரீதியாக பக்க பலத்தை வழங்கும் திட்டத்தில் தனித்துவம் வாய்ந்த தூய பணியை ஆற்றிய ஒரு உன்னத மனிதரின் மறைவு நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மறைந்த சர்வோதய ஸ்தாபகர் ஏ. டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்ற வேளையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மறைந்த ஆரியரத்ன வாழ்நாள் முழுவதும் சிறந்த சமூக சேவை பணிகளை மேற்கொண்டவர். சில காலம் ரணசிங்க பிரேமதாசவுடன் கைகோர்த்து கம் உதாவ திட்டத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கினார். தூய்மையான சமூக நலப் பணிகளை மேற்கொண்ட பண்பானவரின் மறைவு நம் நாட்டுக்கும் மக்களுக்கும் தாங்க முடியாத இழப்பாகும். அவரது சர்வோதயா இயக்கம் இன்றும் நம் நாட்டு மக்களுக்கு பெரும் சேவையை மேற்கொண்டு வருகிறது. அரசியலின் ஊடாக மக்கள் சேவையை மேற்கொள்ள விரும்பும் எவரும் இந்த சர்வோதய இயக்கத்தை முன்னுதாரணமாகக் கொள்ள முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM