இலங்கையின் முதலாவது ஆசிய தங்கப் பதக்க வீரர் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

20 Apr, 2024 | 09:31 AM
image

(நெவில் அன்தனி)

யாழ். மாவட்டத்திலிருந்து உருவாகிய இலங்கையின் தலைசிறந்த மெய்வல்லுநர் கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 89 ஆவது வயதில் ஐக்கிய அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் செரிட்டோசில் வியாழக்கிழமை (18) காலமானார்.

வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் சூழ்ந்திருந்தபோது அவரது உயிர் நிம்மதியாக பிரிந்ததாக அவரது  மகன்  அர்ஜுனன்  எதிர்வீரசிங்கம்   அனுப்பிய WhatsApp தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிய விளையாட்டு விழா வரலாற்றில் இலங்கைக்கு முதலாவது தங்கப் பதக்கதை வென்றுகொடுத்த பெருமை கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்தை சாருகிறது.

ஆசிய விளையாட்டு விழாவின் 3ஆவது அத்தியாயம் டோக்கியோவில் 1958ஆம் ஆண்டு நடைபெற்றபோது கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் உயரம் பாய்தலில் 2.03 மீட்டர் உயரத்தை தாவி ஆசிய விளையாட்டு விழா சாதனையுடன் இலங்கைக்கு தங்கப் பதக்கத்தை சுவீகரித்துக் கொடுத்து வரலாற்று நாயகனானார்.

1962  ஆசிய விளையாட்டு விழாவிலும்   இதே நிகழ்ச்சியில் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. 1954 ஆசிய விளையாட்டு விழாவிலும் அவர் பங்குபற்றியிருந்தார்.

இதனைவிட  யாழ். மத்திய கல்லூரியில் 17 வயது மாணவனாக இருந்தபோது  ஹெல்சின்கி 1952 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக பங்குபற்றியதுடன் 4 வருடங்களின் பின்னர் மெல்பர்ன் 1956 ஒலிம்பிக் விளையாட்டு விழாவிலும் கலாநிதி எதிர்வீரசிங்கம் பங்குபற்றியிருந்தார்.

யாழ். மத்திய கல்லூரியிலும் கொழும்பு புனித சூசையப்பர் கல்லூரியிலும் கல்வி பயின்ற அவர், பிற்காலத்தில் இலங்கையின் மெய்வல்லுநர் விளையாட்டுத்துறையின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றினார்.

மெய்வல்லுநர்களின் மேம்பாட்டை முன்னிட்டு, குறிப்பாக வடக்கு, கிழக்கு மெய்லுநர்களின் மேம்பாட்டை முன்னிட்டு பல்வேறு பயிற்சி நெறிகளை நடத்தினார்.

இலங்கையின் மற்றொரு உயரம் பாய்தல் வீரரான மஞ்சுல குமாரவுக்கு பயிற்சி அளித்து அவரை சர்வதேச அரங்கில் பதக்கங்கள் வெல்லும் மெய்வல்லுநராக உருவாக்கிய பெருமை கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்தை சாருகிறது.

அமெரிக்காவிலிருந்து தாயகத்திற்கு (இலங்கை) வருகை தந்தபோதெல்லாம் யாழ்ப்பாணத்திலும் கொழும்பு சுகததாச அரங்கிலும் இளம் மெய்வல்லுநர்களுக்கு அவர் ஆலோசனைகள் வழங்கத் தவறியதில்லை.

யாழ்ப்பாணம் பெரியவிளானில் 1933 ஆகஸ்ட் 24ஆம் திகதி பிறந்த இவர் யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். 

பாடசாலை பருவத்திலேயே உயரம் பாய்தலில் அகில இலங்கை சாதனையை முறியடித்த பெருமையும் அவருக்கு உள்ளது. 

இலங்கை, சியேரா லியோன், பப்புவா நியூ கினியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியுள்ள நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் யுனெஸ்கோவிலும் 5 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மெய்வல்லுநர் விளையாட்டுத்துறையில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்தின் ஆத்துமா சாந்தி அடைய 'வீரகேசரி' பிரார்த்திப்பதுடன் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இங்கிலாந்துக்கு 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் ...

2024-05-28 19:17:09
news-image

சினா க்ரோன் ப்றீ 400 மீ....

2024-05-28 17:59:53
news-image

தேசிய கராத்தே தெரிவுக்குழு 2024 !

2024-05-28 10:23:17
news-image

பங்களாதேஷைவிட வெற்றிபெற வேண்டும் என்ற வேட்கை...

2024-05-27 19:58:22
news-image

ரி20 உலகக் கிண்ண பயிற்சிப் போட்டி:...

2024-05-27 18:36:04
news-image

மகேஸ்வரன் சவால் கிண்ண யாழ். மாவட்ட...

2024-05-27 17:47:06
news-image

இலங்கையில் கால்பந்தாட்டத்தை முன்னேற்ற லைக்கா ஞானம்...

2024-05-27 15:59:29
news-image

உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பதக்கம்...

2024-05-27 13:31:34
news-image

ஹைதராபாத்தை 8 விக்கெட்களால் வீழ்த்தி  ஐபிஎல்...

2024-05-27 01:37:33
news-image

ஐ.பி.எல். 2024 இறுதிப் போட்டி இன்று...

2024-05-26 10:41:17
news-image

MCA - ஹொண்டா ஜீ பிரிவு...

2024-05-26 09:38:45
news-image

 உலக பரா மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையின்...

2024-05-25 20:58:29