(எம்.நியூட்டன்)
வெவ்வேறு புத்தக வடிவில் இருக்கும் கடற்றொழில் சட்டங்களை ஒன்றிணைத்து தற்காலத்துக்கு ஏற்ற வகையில் கடற்தொழில் செயற்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டுவரும் புதிய சட்டமூல வரைபு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (19) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விருந்தினர் விடுதி மண்டபத்தில் யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சுதாகரனின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், புதிய சட்டமூலம் தொடர்பாக கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்துடன் இணைந்து கடற்றொழில் அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் தவராசா வளவாளராக கலந்துகொண்டு சட்டமூலம் தொடர்பான கருத்துக்கள், ஆலோசனைகளை வழங்கினார்.
இதில் அமைச்சின் துறை சார் உத்தியோகத்தர்கள், அமைச்சின் சட்ட ஆலோசகர் மற்றும் துறைசார் வல்லுநர்கள், சமாச உறுப்பினர்கள், யாழ். மாவட்ட கடற்றொழில் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது மீன்பிடி நடவடிக்கை உரிமம் வழங்கலில் உள்ள பொதுவான கோட்பாடுகள், மீன்பிடி உரிமத்தின் கால எல்லை, மீன்பிடி நடவடிக்கை உரிமங்களின் கைமாற்றம், வெளிநாட்டு கலன்கள் மூலம் இலங்கை நிலப்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுதலை தடை செய்தல் அல்லது கட்டுப்படுத்தல், இலங்கை நிலப்பரப்புகளில் மீன்பிடி செயற்பாடுகளை நடத்துவதற்கான மீன்பிடி உரிமமொன்றை புதுப்பித்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM