பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்று (22) காலை ஆரம்பித்த சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.

70 நாட்களுக்கு மேலாக பிணை வழங்கப்படாத காரணத்தினால் குறித்த உண்ணாவிரத போராட்டத்தை இவர் நேற்று ஆரம்பித்தார்.

இந்நிலையில் நேற்று மூன்று வேளை உணவையும் தவிர்த்த விமல் வீரவன்ச உண்ணாவிரத போராட்டத்தை தொடர்கின்றார்.

கடந்த ஆட்சி காலத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில், இவர் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.