உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி தெரிவு : ஆசிய தொடர் ஓட்டத்தில் இலங்கையின் 4 அணிகள்

19 Apr, 2024 | 03:45 PM
image

(நெவில் அன்தனி)

பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா தொடர் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான தகுதியைப் பெறும் பொருட்டு உலக மற்றும் ஆசிய தொடர் ஓட்டப் போட்டிகளில் இலங்கை அணிகள் பங்குபற்றும் என ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் (இலங்கை மெய்வல்லுநர் சங்கம்) அறிவித்துள்ளது.

பஹாமாஸில் மே மாதம் 4, 5ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள உலக தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் ஆண்களுக்கான 4 x 400 மீற்றர் அணி மாத்திரம் பங்குபற்றவுள்ளது.

பஹாமாஸ் நகரில் நடைபெறவுள்ள ஆண்களுக்கான 4 x 400 மீற்றர் தொடர் ஓட்டத்தில் பங்குபற்றவுள்ள இலங்கை அணி ஏற்கனவே பெயரிடப்பட்டுள்ளது.

இந்த அணியில் காலிங்க குமாரகே, அருண தர்ஷன, பசிந்து கொடிகார, தினுக்க தேஷான், ராஜித்த ராஜகருண ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

அத்துடன் தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்கில் அமைந்துள்ள தமாசத் பல்கலைக்கழக விளையாட்டுத் தொகுதி அரங்கில் மே மாதம் 20, 21ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள அங்குரார்ப்பண ஆசிய தொடர் ஓட்ட சம்பியன்ஷிப்பில் இலங்கையின் நான்கு அணிகள் பங்குபற்றவுள்ளன. 

 

இலங்கையின் கனவு நனவாகுமா?

இந்த வருடம் பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கையின் தொடர் ஓட்ட அணிகள் பங்குபற்றினால் இலங்கையின் கனவு 24 வருடங்களின் பின்னர் நிறைவேறுவதாக அமையும்.

சிட்னி 2000 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 4 x 400 தொடர் ஓட்டத்திலும் (ரட்னகுமார், ரொஹான் ப்ரதீப் குமார், லங்கா பெரேரா மனுர, சுகத் திலக்கரட்ன, ரங்கா விமலவன்ச) பெண்களுக்கான 4 x 100 தொடர் ஓட்டத்திலும்  (தமயந்தி தர்ஷா, நிம்மி டி ஸொய்சா, தமாரா சமன் தீபிகா, குமாரி ஹேரத் ப்ரதீபா) இலங்கை பங்குபற்றியது.

சிட்னி ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இலங்கை அரையிறுதி வரை முன்னேறியிருந்தது.

பெண்களுக்கான 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முதல் சுற்றுடன் இலங்கை வெளியேறியது.

ஆசிய தொடர் ஓட்ட திறன்காண் போட்டிகள் 

அங்குரார்ப்பண ஆசிய தொடர் ஓட்டப் போட்டிக்கு முன்னோடியாக கொழும்பு சுகததாச அரங்கில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான திறன்காண் ஓட்டப் போட்டிகள் நடத்தப்பட்டது.

அவற்றில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் விதிகள் மீறப்பட்டதால் அப் போட்டி முடிவுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

ஆண்களுக்கான 100 மீட்டர் திறன்காண் தொடர் ஓட்டப் போட்டி மீண்டும் நடத்தப்படும் என ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் (இலங்கை மெய்வல்லுநர் சங்கம்) சமன் குமார குணவர்தன தெரிவித்தார்.

எவ்வாறாயினும் 100 மீட்டர் திறன்காண் ஓட்டப் போட்டியில் பங்குபற்றியவர்களின் நேரப் பெறுதிகளை ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் வெளியிட்டுள்ளது.

என். சத்துரங்க (10.59 செக்.), தினேத் இந்துவர (10.61), தினேத் சேனாநாயக்க (10.62), சானுக்க தர்மகீர்த்தி (10.53), சலித் பியூமல் (10.63), எச். கம்லத் (10.69), சமோத் யோதசிங்க (10.72).

மிரோன் விஜேசிங்க ஓட்டத்தை நிறைவுசெய்யவில்லை.

ஆண்களுக்கான 400 மீட்டர் முடிவுகள்

ராஜித்த ராஜகருண (46.72 செக்.), தினுக்க தேஷான் (46.74), ஹர்ஷா கருணாரத்ன (47.20), இசுரு லக்ஷான் (47.25), இஷான் மதுரங்க (47.68), ஏ.எஸ்.எம். சபான் (48.53)

பெண்களுக்கான 100 மீட்டர் முடிவுகள்

அமாஷா சில்வா (11.95 செக்.), ஷபியா யாமிக் (11.99), தினாரா பண்டார தேல (12.21), அனுருத்திக்கா முத்துக்குமாரன (12.27), ரி.டி. டி சில்வா (12.27), மேதானி ஜயமான்ன (12.27), லக்ஷிகா சுகந்தி (12.31), ஷெனெல்லா செனவிரத்ன (12.41), டி.எஸ். ரனஸ்கால்ல (12.46)

பெண்களுக்கான 400 மீட்டர் முடிவுகள்

தருஷி கருணாரத்ன (53.40 செக்.), ருமேஷிகா ரத்நாயக்க (54.70), நிஷேந்த்ரா பெர்னாண்டோ (55.95), ஷபியா யாமிக் (56.26), எம். பெர்னாண்டோ (56.36), டபிள்யூ.கே.எல்.ஏ. லக்மாலி (56.39), ஷானிகா லக்ஷானி (57.24)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இங்கிலாந்துக்கு 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் ...

2024-05-28 19:17:09
news-image

சினா க்ரோன் ப்றீ 400 மீ....

2024-05-28 17:59:53
news-image

தேசிய கராத்தே தெரிவுக்குழு 2024 !

2024-05-28 10:23:17
news-image

பங்களாதேஷைவிட வெற்றிபெற வேண்டும் என்ற வேட்கை...

2024-05-27 19:58:22
news-image

ரி20 உலகக் கிண்ண பயிற்சிப் போட்டி:...

2024-05-27 18:36:04
news-image

மகேஸ்வரன் சவால் கிண்ண யாழ். மாவட்ட...

2024-05-27 17:47:06
news-image

இலங்கையில் கால்பந்தாட்டத்தை முன்னேற்ற லைக்கா ஞானம்...

2024-05-27 15:59:29
news-image

உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பதக்கம்...

2024-05-27 13:31:34
news-image

ஹைதராபாத்தை 8 விக்கெட்களால் வீழ்த்தி  ஐபிஎல்...

2024-05-27 01:37:33
news-image

ஐ.பி.எல். 2024 இறுதிப் போட்டி இன்று...

2024-05-26 10:41:17
news-image

MCA - ஹொண்டா ஜீ பிரிவு...

2024-05-26 09:38:45
news-image

 உலக பரா மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையின்...

2024-05-25 20:58:29