(எம்.மனோசித்ரா)
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஏற்பட்டுள்ள நிலைமை கவலைக்குரியதாகும். அக்கட்சியின் ஆதரவாளர்கள் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் வேகமாக இணைந்து கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நினைக்கும் அனைத்தையும் செய்யக் கூடிய நிலைமையே தற்போது காணப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்றத்தில் சபாநாயகரும் கைப்பாவையாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். அதே போன்று நிகழ்நிலை காப்பு சட்ட மூலமும் நிறைவேற்றப்பட்டது. தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராகவும் நியமிக்கப்பட்டார்.
வரவு - செலவு திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டுக்கமைய டிசம்பர் 31ஆம் திகதி வரை அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும். ஆனால் ஜூலை மாதத்துக்கு முன்னர் அவற்றை நிறைவு செய்யுமாறு சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அதிகாரம் குறித்த காலப்பகுதியுடன் நிறைவடைய உள்ளமையினாலேயே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமெனில், ஆட்சியில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
பாடசாலை மாணவிகளுக்கு ஆரோக்கிய துவாய்களை வழங்குதல், பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குதல் உள்ளிட்டவை எதிர்க்கட்சி தலைவரால் முன்வைக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் ஆகும். அவற்றையே தற்போது அரசாங்கம் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஏற்பட்டுள்ள நிலைமை கவலைக்குரியதாகும். அக்கட்சியின் ஆதரவாளர்கள் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் வேகமாக இணைந்து கொண்டிருக்கின்றனர்.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகக் கூறிக் கொண்டு ஆட்சியைக் கைப்பற்றிய அரசாங்கத்துக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலைமையிலும் அதன் பின்னணியிலுள்ள உண்மையான சூத்திரதாரிகளை அடையாளங்காண முடியாமல் போயுள்ளது. தற்போது தேர்தல் அண்மிப்பதால் வெ வ்வேறு விடயங்களைக் கூற ஆரம்பித்துள்ளனர்.
நாடு தற்போதுள்ள நிலைமையில் எந்த கட்சி வேண்டும் என்பது மக்களின் பிரச்சினை அல்ல. மாறாக நாட்டை கட்டியெழுப்பக் கூடிய தலைவருடன் ஒரு பலம் மிக்க குழுவே அவசியமாகும். அவ்வாறான தலைவரும் குழுவும் ஐக்கிய மக்கள் சக்தியிடமே உள்ளனர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM