லுணுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொப்டன் தோட்ட , 19 ஆவது மைல்கல் பகுதியில் உள்ள பழைய தொழிற்சாலைப் பிரிவில் மலைப்பாங்கான பிரதேசத்தில் ஓடும் ஆற்றில் மூழ்கி 16 வயது மதிக்கத்தக்க பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை (18) மாலைவேளையில் இடம்பெற்றுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
குறித்த மாணவனும் அவருடைய நண்பர்கள் இருவரும் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த வேளை திடீரென ஏற்பட்ட சுழியில் சிக்குண்டு நீரினுள் இழுத்துச் செல்லப்பட்ட மாணவன் கற்பாறைக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.
மாணவனின் சடலம் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு ஹொப்டன் ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இம்மாணவன் இப்பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி பயின்று வந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லுனுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM