இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை பாதுகாப்பாக உள்ளது - ஈரான் ஊடகம்

19 Apr, 2024 | 11:47 AM
image

இஸ்பஹான் நகரத்தில் அணுஉலை பாதுகாப்பாக உள்ளதை காண்பிக்கும் வீடியோவை ஈரானின் அரச ஊடகம் வெளியிட்டுள்ளது.

ஈரானின் புரட்சிகர பாதுகாவலர் படைப்பிரிவிற்கு நெருக்கமான டஸ்னிம் செய்தி முகவர் அமைப்பு இஸ்பஹான் அணுஉலை பாதுகாப்பாக உள்ளது என்ற செய்தியுடன் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

இஸ்பஹான் அணுதொழில்நுட்ப நிலையத்திற்கு அருகில் ஒருவர் தனது கைக்கடிகாரத்தை ஆராயும் வீடியோவொன்றை ஈரான் ஊடகம் வெளியிட்டுள்ளது.

வான்வெளிபாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பல படையினரையும் வீடியோ காண்பித்துள்ளது.

இந்த அணுசக்தி நிலையத்தில் யுரேனியத்தை வேறுவடிவத்திற்கு மாற்றும் தொழில்நுட்பம் காணப்படுகின்றது என தெரிவிக்கும் உலக அணுசக்தி சங்கம் இங்கு யுரேனியம் ஹெக்சாபுளோரைட் உற்பத்தி செய்யப்படுகின்றது என தெரிவித்துள்ளது.

செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உருவாக்குவதற்காக ஈரான் ஹெக்சாபுளோரைட்களை பயன்படுத்துகின்றது இதன் மூலம் அணுவாயுதங்களையும் அணுஉலை எரிபொருளையும் ஈரான் தயாரிக்கின்றது.

இஸ்பஹான் அணுதொழில்நுட்ப மையத்தில் சீனா வழங்கிய நான்கு அணுஉலைகளையும் ஈரான் இயக்குகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடவுள் கலவரத்தை தூண்டக் கூடாது’’ -...

2024-05-29 15:38:53
news-image

மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்வையிடத் தயாராகும்...

2024-05-29 16:10:51
news-image

அமெரிக்காவின் ஒகாயோவில் வெடிப்புச்சம்பவம் - ஏழு...

2024-05-29 11:51:40
news-image

ரபாவில் 45 பேரை பலி கொண்ட...

2024-05-29 11:38:36
news-image

கேரள கனமழை: கொச்சியில் மேகவெடிப்பு -...

2024-05-29 09:48:41
news-image

பாலஸ்தீனத்தை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தன நோர்வே அயர்லாந்து...

2024-05-28 20:10:07
news-image

11 ஆவது உலக நீர் மன்றத்தை...

2024-05-28 21:49:41
news-image

ரபாமீதான இராணுவநடவடிக்கையை இஸ்ரேல் தொடரக்கூடாது- அவுஸ்திரேலியா

2024-05-28 11:43:29
news-image

இஸ்ரேலை எதிர்க்க முடியாத நிலையில் உலகின்...

2024-05-28 10:37:39
news-image

டெல்லியில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

2024-05-28 09:34:31
news-image

துருக்கியில் வாகனங்கள் மீது பஸ் மோதி...

2024-05-28 09:23:04
news-image

தேர்தல் பரப்புரையின் போது ராகுல் காந்தி,...

2024-05-28 02:48:14