கடமைக்கு சமூகமளிக்காமல் இருக்கும் இராணுவ வீரர்கள் சட்டரீதியாக இராணுவ சேவையில் இருந்து வெளியேற பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொதுமன்னிப்பு காலமானது ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முதல் மே மாதம் 20 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அனுமதி இன்றி விடுமுறையில் இருக்கும் இராணுவ வீரர்கள் தங்களது படைப்பிரிவு மத்திய நிலையங்களில் சட்டரீதியாக சேவையில் இருந்து விலக சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக இலங்கை இராணுவம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி மற்றும் அதற்கு முன்னதான காலங்களில் அனுமதி இன்றி விடுமுறையில் இருந்த இராணுவ வீரர்கள் தங்களது படைப்பிரிவு மத்திய நிலையங்களுக்கு தங்களது இராணுவ அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டையின் நகல் பிரதி அல்லது சாரதி அனுமதி பத்திரத்திரத்தின் நகல் பிரதி ,சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள வங்கி புத்தகத்தின் நகல் பிரதி, கடைசியாகப் பெற்றுக் கொண்ட சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளின் சீட்டுகளின் நகல் பிரதி என்பவற்றை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM