தமிழ் திரையுலகில் சர்ச்சையான அழுத்தமான கனமான கதாபாத்திரங்களை தெரிவு செய்து தன் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் நடிகை ஆண்ட்ரியா கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'மனுசி' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
'அறம்' எனும் திரைப்படத்தை இயக்கி ஒட்டுமொத்த தமிழர்களின் கவனத்தை தன் பக்கம் திரும்பிய இயக்குநர் என். கோபி நாயனார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'மனுசி' திரைப்படத்தில் ஆண்ட்ரியா, நாசர், தமிழ், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், ஹக்கிம் ஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஏ எம் எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
சாதிய அரசியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பி ஃபார் யூ- ஐ வி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பனி எனும் பட நிறுவனங்கள் சார்பில் இயக்குநர் வெற்றிமாறனின் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
முன்னோட்டத்தில் சமூக மாற்றத்திற்காக பாடுபடும் ஆண்ட்ரியா கதாபாத்திரத்தின் சமூக நல்லிணக்க நடவடிக்கையை அச்சுறுத்தும் வகையிலும், தடுத்து நிறுத்தும் வகையிலும் காவல்துறையினரின் பல பிரிவுகள் விசாரிக்கும் காட்சிகள் இடம் பிடித்திருப்பதாலும், இதன் போது கதையின் நாயகி பேசும் வசனங்களில் சாதிய அரசியலும், இன அரசியலும், நிலவியல் அரசியலும் பளிச்சென இடம் பிடித்திருப்பதாலும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM