எம்முடைய குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு இடையே கருத்து முரண்பாடு ஏற்படுவது இயல்பு. ஆனால் இவை அதிக நாட்கள் ஆயுள் கொண்டவை அல்ல.
விரைவில் கருத்து முரண் களையப்பட்டு, சமரசமாகி, உறவு மேலாண்மையை சீராக கடைப்பிடிக்க வேண்டும். இதனால் குடும்பத்தில் அமைதியும், நிம்மதியும், மகிழ்ச்சியும் நீடிக்கும். ஆனால் எதிர்பாராத விதமாக எம்முடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் ஏற்படும் மனக்கசப்பு என்பது பேசா நிலையை எட்டி மனதில் பகையாக வளர்த்துக் கொள்வர்.
உதாரணத்திற்கு தந்தை -மகன் இடையிலான விரிசல், தாய்- மகள் இடையேயான பிரிவு, கணவன்- மனைவி இடையேயான மனமுறுகல், அண்ணன் -தம்பிகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடு, அக்கா- தங்கைகளுக்கு இடையேயான வாக்குவாதம் குடும்பத் தலைவர் - பங்காளி என உறவுகளுக்குள் ஏராளமான சிக்கல் ஏற்படும்.
பெரும்பாலும் இவை தானாக சரியாகும் என்றுதான் எம்முடைய மூத்த உறுப்பினர்களின் அனுபவமாக இருக்கிறது. ஆனால் சில தருணங்களில் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான மனக்கசப்பு குடும்ப பிரச்சனையாக மாறி மகிழ்ச்சியை அழித்து விடும்.
இதன் பிறகு தான் பொறுப்பு மிக்க குடும்ப உறுப்பினர்கள் இதற்கான பரிகாரத்தை தேடி ஆன்மீக பெரியோர்களையோ அல்லது குடும்ப ஜோதிடர்களையோ அணுகுவர்.
ஆனால் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் இத்தகைய குடும்பங்களில் நிலவும் பிரச்சனைகளை குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான சிக்கலை தீர்ப்பதற்கு, இதில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பரிகாரத் தலமாக ஒரு சிவாலயத்தை முன்மொழிந்திருக்கிறார்கள். அந்த சிவாலயம் திருமுல்லைவாயில் மாசிலாமணிஸ்வரர் ஆலயம்.
இது தமிழகத்தின் தலைநகரான சென்னையிலிருந்து திருவள்ளூர் செல்லும் வழித்தடத்தில் அமைந்திருக்கிறது. சென்னை விமான நிலையத்திலிருந்து இந்த ஆலயத்திற்கு நேரடியாக பேருந்து மற்றும் வாடகை வாகனத்தில் செல்ல முடியும்.
இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாளிக்கிறார். இந்த ஆலயத்தில் சிவபெருமானை பிரதிஷ்டை செய்யப்பட்ட காலத்திலிருந்து இதுவரை லிங்க திருமேனியை யாரும் தொடுவதில்லை.
கருவறைக்குச் சென்று இறை ஊழியம் செய்யும் அன்பர்கள் கூட இந்த லிங்க திருமேனியை தொட்டு அலங்கரிப்பதில்லை. முல்லை பூ பூக்கும் புதரிலிருந்து சிவபெருமான் தோன்றியதன் காரணமாக திரு முல்லைவாயல் என்றும், இறைவனின் திருநாமம் மாசில்லா மணீஸ்வரர் என்றும் குறிப்பிடப்படுகிறது.
குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே உள்ள கருத்து முரணை களைவதற்காக இங்கு வருகை தரும் பக்தர்கள் குறிப்பாக திங்கள் கிழமைகளில் வருகை தருகிறார்கள்.
முல்லை மலரை சாற்றி இறைவனை வழிபடுகிறார்கள். இந்த ஆலயத்திற்கு வருகை தந்த பிறகு குடும்ப உறுப்பினர்களுக்கும் இருந்த மனக்கசப்பு நீங்கி, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை உண்டாவதாக பக்தர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி மீண்டும் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கிறார்கள்.
இங்கு பார்வதி தேவியார் கொடியிடை நாயகி எனும் பெயரில் அருள் பாலிக்கிறார். திருமணத்தடை, திருமண வரம் வேண்டுபவர்கள் இந்த அம்மனை ஒன்பது வெள்ளி கிழமைகளில் தொடர்ந்து முல்லை மலர் சாற்றி வணங்கி வர விருப்பம் நிறைவேறுவதாகவும் பக்தர்கள் தெரிவிக்கிறார்கள்.
சுயம்புவாய் எழுந்தருளி அருள் பாலிக்கும் மாசிலாமணீஸ்வரரை மகாவிஷ்ணு, பிரம்மன், முருகன், ராமர், லட்சுமணன், அவர்களது வாரிசான லவ- குஷா, கிருஷ்ண பரமாத்மா, சூரியன், சந்திரன் மற்றும் 27 நட்சத்திரங்களும், நட்சத்திரங்களுக்குரிய அதிதேவதையும் இங்கு இறைவனை வணங்கி அருள் பெற்றதாக புராணங்கள் கூறுகிறது.
அதனால் இந்த ஆலயத்தில் நவகிரக சன்னதி இல்லை. நந்தியும் இறைவனின் நோக்கி இல்லாமல் பக்தர்களை நோக்கி இருப்பதால் உங்களது வேண்டுதல்கள் விரைவாக நிறைவேறுகிறது என்றும் ஆன்மீக அன்பர்கள் குறிப்பிடுகிறார்கள்.
கருவறையில் ராசலிங்கம் ஒன்று இருப்பதாகவும், அது சக்தி மிக்கதாகவும் கருதப்படுகிறது. மேலும் இந்த ஆலயத்தில் சிவபெருமான் மற்றும் அம்பாள் கிழக்கு நோக்கி எழுந்தருளி அருள் பாலிப்பதால் உங்களுடைய கோரிக்கை உறுதியாக நிறைவேறும் என்று ஆன்மிக அன்பர்கள் குறிப்பிடுகிறார்கள்.
மேலும் உங்களது கோரிக்கை நிறைவேறுவதற்கு தற்போது பக்தர்கள் சிறிய அளவிலான மணி ஒன்றினை ஆலய வளாகத்தில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் கட்டி வருகிறார்கள். இதன் மூலம் அவர்களது கோரிக்கை விரைவில் நிறைவேறுவதாக நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.
மனிதர்களுக்கு தேவையான மூன்று சக்திகளில் இத்தலத்து நாயகியாக ஸ்ரீ கொடியிடை நாயகி கிரியா சக்தியாக கருதப்படுகிறார். அதனால் இந்த அம்பாளை மாலை வேலையில் அபிஜித் முகூர்த்த வேளை என கருதப்படும் ஐந்து நாற்பத்தி ஐந்து மணி முதல் ஆறு பதினைந்து மணி வரை உள்ள அந்தி சாயும் நேரத்தில் வணங்கினால் கூடுதல் பலன் கிடைக்கும் என்றும் பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.
சிவபெருமானின் பஞ்சபூத தலங்களைப் பற்றி அதன் மகத்துவத்தை பற்றி அறிந்திருப்போம். அதற்கு நிகரான புண்ணிய ஸ்தலமாக திருமுல்லைவாயில் மாசிலாமணிஸ்வரர் கருதப்படுவதால் இந்த ஆலயத்திற்கு ஒரு முறை வருகை தந்து ஈசனை தரிசிப்பதன் மூலம் எம்முடைய குடும்பத்தில் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் அதிகரித்துக் கொள்வோம்.
தொகுப்பு : சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM