கடத்தப்பட்டு மியன்மாரில் உள்ள சட்டவிரோத சைபர் அடிமைகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 56 இலங்கையர்களில் 8 பேர் மீட்கப்பட்டிருந்த நிலையில் இன்று (18) இலங்கையை வந்தடைந்தனர்.
இலங்கையை வந்தடைந்த 8 பேரில் 6 ஆண்களும் 2 பெண்களும் காணப்படுகின்றனர்.
இவர்கள் 8 பேரும் இன்று (18) காலை 9.50 மணியளவில் இலங்கை விமான சேவை ஊடாக தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவர்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வேலைவாய்ப்புக்காக தாய்லாந்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ள நிலையில் மியன்மாரின் பயங்கரவாத குழுவால் கடத்தப்பட்டு சட்டவிரோத சைபர் அடிமைகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், எஞ்சிய 48 இலங்கையர்களை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜானக பண்டார தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM