(நெவில் அன்தனி)
தாய்லாந்தின் புக்கெட்டில் அண்மையில் நடைபெற்ற 2024 சர்வதேச பளுதூக்கல் சம்மேளன உலகக் கிண்ண போட்டியானது உலக பளுதூக்கல் போட்டி வரலாற்றில் முன்னர் ஒருபோதும் கண்டிராத மிகப் பெரிய நிகழ்ச்சிகளில் ஒன்றாகப் பதிவானது.
இப்போட்டி பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான தகுதிகாண் பளுதூக்கல் போட்டியாக அமைந்ததால் பெரும்பாலான பளுதூக்கல் போட்டியாளர்கள் என்ன விலைகொடுத்தேனும் ஒலிம்பிக் தகுதியைப் பெற்றுவிட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் பங்குபற்றினர்.
நினைத்துப்பார்க்க முடியாத பல முடிவுகள், பல தோல்விகள் ஆகியவற்றுக்கு மத்தியில் உலகக் கிண்ண பளுதூக்கல் போட்டியில் 15 உலக சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.
ஒவ்வொரு எடைப் பிரிவிலும் முதல் 10 இடங்களைப் பெறுவதற்கு சகல போட்டியாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கும் வகையில் உலகக் கிண்ண பளுதூக்கல் போட்டி தீர்மானம் மிக்க தகுதிகாண் சுற்றாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
என்றாலும் ஒவ்வொரு எடைப் பிரிவிலும் ஒரே நாட்டைச் சேர்ந்த சகாகக்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. ஒவ்வொரு நாட்டினதும் தேசிய ஒலிம்பிக் குழு சார்பாக ஒரு போட்டியாளருக்கு மாத்திரமே ஒலிம்பிக்கில் பங்குபற்ற வாய்ப்பு வழங்கப்படுவதாலேயே இந் நிலை தோன்றியது.
கடந்த இரண்டு வருடங்களில் பளு தூக்கும் போட்டியாளர்கள் மிகப் பெரிய மொத்த எடைகளைத் தூக்கி அசத்தியிருந்தனர். ஆனால் உலகக் கிண்ணத்தில் அது மாறிப்போனது.
உலக சாதனையார்களுக்கு ஏமாற்றம்
எதிர்பார்க்கப்பட்ட வீர, வீராங்கனைகள் கடைசிக் கட்டத்தில் தோற்றனர்.
ஒலிம்பிக் பளுதூக்கல் வரிசையில் முன்னிலையில் இருந்த பலர் கடைசிக் கட்டத்தில் தங்கள் சக வீரர்கள் அல்லது வீராங்கனைகளால் தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.
இதன் காரணமாக ஒலிம்பிக் சம்பியன்கள், ஒலிம்பிக் பதக்கங்கள் வென்றவர்கள், உலக சம்பியன்கள், கண்டங்களின் பளுதூக்கல் நட்சத்திரங்கள் ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தனர். அது நியாயமா? இல்லையா? என்பது இரண்டாவது விடயம். ஆனால் அதுதான் நிஜம். ஒலிம்பிக்கில் இந்த விளையாட்டு நிலைப்பதற்கான நிஜமும் அதுதான்.
உலகக் கிண்ண பளுதூக்கல் போட்டிகளின்போது பலர் கடைசிக் கட்டத்தில் ஒலிம்பிக் வாய்ப்புகளை தமதாக்கிக்கொண்டனர். எதிர்பார்க்கப்பட்ட சாதனை நாயகர்களுக்கு ஏமாற்றமும் காத்திருந்தது.
இந்தோனேஷியாவின் உலக சாதனையாளரும் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான ஏர்வின் ரஹ்மாத், அவரது சக வீரர் ரிஸ்கி ஜுனியன்சியாவினால் தோற்கடிக்கப்பட்டார்.
இதேவேளை பிலிப்பைன்ஸின் ஹிடிலின் டயஸ் எதிர்பாராத விதமாக சக வீராங்கனை எல்ரீன் அண்டோவினால் நொக் அவுட் செய்யப்பட்டார்.
ஆர்மேனிய வீரர் கனிஷ்ட உலக சம்பியன் கறிக் கராபெட்யன், தனது சக வீரர் சாம்வேல் கஸ்பரியானை வெற்றிகொண்டு ஒலிம்பிக் தகுதியைப் பெற்றுக்கொண்டார்.
அவர்களைப் போன்று சீனா, கத்தார், ஈக்வடோர், தாய்லாந்து உட்பட இன்னும் சில நாடுகளைச் செர்ந்த சாதனையாளர்கள் கடைசிக் கட்டத்தில் தங்களது சொந்த நாட்டு வீர, வீராங்கனைகளால் வெளியேற்றப்பட்டனர்.
இது இவ்வாறிருக்க, டோக்கியோ 2020 ஒலிம்பிக் சம்பயினான ஈக்வடோர் வீராங்கனை நீசி டஜோம்ஸ் மற்றொரு வெற்றிக்கு குறிவைத்து பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் பங்குபற்றவுள்ளார். இவர் பெண்களுக்கான 75 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிடவுள்ளார்.
ஆண்கள், பெண்களுக்கு சம வாய்ப்பு
ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றும் பளு தூக்கும் போட்டியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய கட்டயா நிலைக்கு உலக பளுதூக்கும் சம்மேளனம் தள்ளப்பட்டது. அத்துடன் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்கவும் சம்மேளனம் தீர்மானிக்க வேண்டியிருந்தது. இதற்கு அமைய பாரிஸ் 2024 ஒலிம்பிக் பளுதூக்கல் போட்டியில் ஒவ்வொரு எடைப் பிரிவிலும் 12 வீரர்களும் 12 வீராங்கனைகளும் பங்குபற்றவுள்ளனர்.
இதேவேளை, தடைசெய்யப்பட்ட ஊக்கு மருந்து பாவனையாளர்களின் எண்ணிக்கையை குறைக்க சம்மேளனம் நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது. அந்த சவாலை அவர்கள் வெற்றிகரமாக நிறைவேற்றியதாக நம்பப்படுகிறது.
ஒலிம்பிக்கில் வட கொரியா இல்லை
பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் வட கொரியா பங்குபற்றாது. பளுதூக்கலில் சந்தேகத்திற்கிடமின்றி வட கொரியாவே பலம்வாய்ந்ததாகும். சீனாவை விடவும் வட கொரியா பலம்வாய்ந்ததென கருதப்படுகிறது. ஆனால், அவர்களது துரதிர்ஷ்டம் இம்முறை ஒலிம்பிக்கில் பங்குபற்றும் வாய்ப்பு அற்றுப் போயுள்ளது. தகதிகாண் சுற்று வாய்ப்பை அவர்கள் தவறவிட்டது துரதிர்ஷ்டமாகும்.
டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் வட கொரியா பங்குபற்ற தவறிதால் வட கொரியாவின் தேசிய ஒலிம்பிக் குழுவை 2021இல் சர்வதேச ஒலிம்பிக் குழு தடை செய்தது. தடை நீக்கப்பட்ட பின்னர் சர்வதேச பளுதூக்கல் சம்மேளன க்ரோன் ப்றீ 2023 (ஜூன் மாதம்), உலக சம்பியன்ஷிப்ஸ் 2023 (செப்டெம்பர் மாதம்) ஆகிய போட்டிகளில் பங்குபற்றி அதன் மூலம் பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கு தகுதிபெற சந்தர்ப்பம் உருவானது. ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை, இந்த இரண்டு போட்டிகளிலும் அவர்கள் பங்குபற்றவில்லை.
உலக சம்பியன்ஷிப்ஸுக்குப் பின்னர் குவாங்சூ 2023 ஆசிய விளையாட்டு விழா, உஸ்பெகிஸ்தான் 2024 ஆசிய சம்பியன்ஷிப்ஸ், அண்மைய 2024 உலகக் கிண்ணம் ஆகியவற்றில் வட கொரியர்கள் 6 உலக சாதனைகளுடன் 8 தங்கப் பதக்கங்ளை சுவீகரித்தனர். இதன் காரணமாக பாரிஸ் ஒலிம்பிக்கில் வட கொரியர்கள் ஏனைவர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் என கருதப்பட்டது. ஆனால், அது நடைபெறாது. இது ஒலிம்பிக் தகுதியைப் பெற்ற ஏனைய நாடுகளின் பளுதூக்கும் வீர, வீராங்கனைகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
டோக்கியோவில் 190 பளுதூக்கும் போட்டியளார்கள் பங்குபற்றினர். ஆனால், பாரிஸில் 10 எடைப் பிரிவுகளில் 120 போட்டியாளர்களே பங்குபற்றவுள்ளனர்.
டோக்கியோவில் 7 தங்கப் பதக்கங்களுடன் சீனா ஆதிக்கம் செலுத்தியிருந்தது.
ஈக்வடோர், சைனீஸ் தாய்ப்பே, ஜோர்ஜியா, கனடா, பிலிப்பைன்ஸ், கத்தார், உஸ்பெகிஸ்தான் ஆகியன தலா 1 தங்கப் பதக்கத்தை வென்றிருந்தன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM