நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி : விஷம் கொடுக்கப்பட்டதாக பரபரப்பு !

Published By: Digital Desk 3

18 Apr, 2024 | 01:17 PM
image

நடிகர் மன்சூர் அலிகான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது உடல் நலக்குறைவு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்  தனக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மன்சூர் அலிகான் எதிர்வரும் 19 ஆம் திகதி  நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பலாப்பழ சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இந்நிலையில், பல பகுதிகளில் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில்  ஈடுபட்டு வந்துள்ளார்.

நேற்று புதன்கிழமை (17) குடியாத்தம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

மன்சூர் அலிகான் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் இன்று வியாழக்கிழமை (18) அறிக்கையொன்று விடுத்துள்ளார். அதில், 

“நேற்று குடியாத்தம் சந்தையிலிருந்து திரும்பி ஒரு இடத்துல, கட்டாயப்படுத்தி, பழ ஜூஸ் குடுத்தாங்க. அதன் பிறகு, மோர் குடுத்தாங்க... குடிச்ச உடனே வண்டியில் இருந்து விழ இருந்தேன்.

மயக்கம், அடி நெஞ்சு தாங்க முடியாத வலி... உடனே பாலாறு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க, Treatmet குடுத்தும் வலி நிக்கல. அதிகமாக சென்னைக்கு K.M. நர்ஸிங் ஹோம் க்கு ஆம்புலன்ஸ்ல கூட்டிட்டு வந்து, டாக்டர் பாலசுப்ரமண்யன் ஐ.சி.யூ-ல அட்மிட் பண்ணி, இப்ப கொஞ்சம் கம்மியாயிருக்கு. விஷ முறிவு, நுரையீரல் வலி போக Trips குடுத்தார்கள். இன்று மதியம் 2 மணிக்கு சாதாரண வார்டுக்கு மாற்றுவார்கள் என சொல்லப்படுது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மன்சூர் அலிகான் தனது பிஆர்ஓ கோவிந்தராஜ் மூலம், பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற...

2024-05-29 17:35:12
news-image

மிர்ச்சி சிவா நடிக்கும் 'சூது கவ்வும்...

2024-05-29 17:32:38
news-image

உலக நாயகன்' கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன்...

2024-05-29 17:26:07
news-image

புரட்சித் தமிழன்' சத்யராஜ் நடித்திருக்கும் 'வெப்பன்'...

2024-05-29 17:22:28
news-image

கவித்துவமான எக்சன் பொழுதுபோக்கு திரைப்படம் தான்...

2024-05-29 17:20:26
news-image

அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2-...

2024-05-29 16:58:10
news-image

செல்லப்பிராணியை தேடி இரு சிறார்களின் பயணத்தை...

2024-05-28 16:52:03
news-image

ரசிகர்களுக்கு இரட்டை பரிசை அளிக்கும் விஜய்

2024-05-28 16:10:02
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'காதலிக்க நேரமில்லை'...

2024-05-28 16:02:09
news-image

உருவ கேலிக்கு துணை போயிருக்கும் இசைப்புயல்...

2024-05-28 06:02:25
news-image

கார்த்தி - அரவிந்த்சாமி இணையும் 'மெய்யழகன்'

2024-05-28 06:02:57
news-image

நடிகர் துருவா சர்ஜா நடிக்கும் 'மார்டின்'...

2024-05-28 06:05:33