(நெவில் அன்தனி)
கஸக்ஸ்தானின் அஸ்டானாவில் இம்மாதம் 25ஆம் திகதியிலிருந்து மே மாதம் 8ஆம் திகதிவரை நடைபெறவுள்ள 22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கையின் அதிசிறந்த நான்கு குத்துச்சண்டை வீரர்கள் பங்குபற்றவுள்ளனர்.
22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டை போட்டி நடைபெறுவது இது மூன்றாவது தடவையாகும்.
இப் போட்டியில் 20க்கும் மேற்பட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட குத்துச்சண்டை வீரர்கள் பங்குபற்றுகின்றனர்.
இலங்கை வீரர்களை கஸக்ஸ்தானுக்கு அனுப்பிவைப்பதற்கு விளையாட்டுத்துறை அமைச்சிடமிருந்து நிதி உதவி கிடைக்காத நிலையில் டயான் கோமஸின் முயற்சியால் வீரர்களுக்கான விமான டிக்கெட்களை சரவ்தேச குத்துச்சண்டை சங்கத் தலைவர் உமர் க்ரெம்லெவ் பெற்றுக்கொடுத்ததாக இலங்கை குத்துச்சண்டை சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் தலைவராக ப்ளை வெய்ட் (52 கி.கி.) எடைப் பிரிவில் நடப்பு தேசிய சம்பியன் பசிந்து உமயங்க மிஹிரன் செயற்படுகிறார்.
மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மிஹிரன், அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவிலும் தேசிய சம்பியன்ஷிப்பிலும் அதிசிறந்த குத்துச்சண்டை வீரர் விருதுகளை வென்றிருந்தார்.
லைட் வெய்ட் (60 கி.கி.) எடைப் பிரிவில் யசிது ப்ரேமரத்ன பங்குபற்றுகிறார். இவர் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான ஸ்டப்ஸ் கேடய குத்துச்சண்டை போட்டியில் கடந்த வருடம் அதிசிறந்த குத்துச்சண்டை வீரராக தெரிவானார். அத்துடன் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.
இலங்கை அணியில் இடம்பெறும் 3ஆவது வீரரான சல்மான் ஃபாரிஸ் வெகுவாக முன்னேறிவரும் குத்துச்சண்டை வீரராவார். மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை ஃபாரரிஸ் வென்றிருந்தார்.
வளர்ந்துவரும் வீரரான ஹேஷான் ஜயசிங்க அணியில் இடம்பெறும் நான்காவது வீரராவார்.
2018 பாடசாலைகள் குத்துச் சண்டைப் போட்டியில் சம்பியனான ஹேஷான் ஜயசிங்க, படிப்படியாக முன்னேறி கடந்த இரண்டு வருடங்களில் அகில இலங்கை பாடசாலைகள் ஸ்டப்ஸ் கேடய குத்துச்சண்டை போட்டிகளில் சம்பியனாகியிருந்தார்.
இந்த நால்வரும் கஸக்ஸ்தானில் இலங்கைக்கு பெருமை சேர்த்துக்கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM