குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற டெல்ஹி 6ஆம் இடத்திற்கு முன்னேறியது

Published By: Vishnu

17 Apr, 2024 | 11:52 PM
image

(நெவில் அன்தனி)

அஹமதாபாத் நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் புதன்கிழமை (17) நடைபெற்ற இந்த வருடத்துக்கான 32ஆவது இண்டியன் பிறீமியர் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை 89 ஓட்டங்களுக்கு சுருட்டிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 4விக்கெட்களால் இலகுவாக வெற்றிபெற்றது.

இந்த வெற்றியுடன் ஐபிஎல் அணிகள் நிலையில் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 9ஆம் இடத்திலிருந்து 6ஆம் இடத்திற்கு முன்னேறியது.

வழமையாக ஒவ்வொரு போட்டியிலும் சராசரியாக 400 ஓட்டங்களுக்கு மேல் இரண்டு அணிகளால் பெறப்பட்டுவந்துள்ள போதிலும் இன்றைய போட்டியில் மொத்தமாக 181 ஓட்டங்களே பெறப்பட்டது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் 17.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 89 ஓட்டங்களைப் பெற்றது.

குஜராத் டைட்டன்ஸ் துடுப்பாட்ட வீரர்களின் கவனக் குறைவு ஒரு புறம் இருக்க டெல்ஹி கெப்பிட்டல்ஸின் அதிர்ஷ்டமும் குஜராத்தின் சரிவுக்கு காரணமாக அமைந்தன.

டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணித் தலைவர் ரிஷாப் பான்ட் விக்கட் காப்பில் அற்புதமாக செயற்பட்டு 2 ஸ்டம்ப்களை செய்ததுடன் ஒரு பிடியையும் எடுத்தார்.

இண்டியன் பிறீமியர் லீக் போட்டியில் குஜராத் பெற்ற மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கை இதுவாகும். அத்துடன் இந்த வருடம் அணி ஒன்றினால் பெறப்பட்ட குறைந்த எண்ணிக்கையாகவும் இது பதிவானது.

மத்திய வரிசை வீரர் ராஷித் கான் மாத்திரமே சாதுரியமாகத் துடுப்பெடுத்தாடி 24 பந்துகளில் 31 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

அவரைவிட சாய் சுதர்ஷன் (12), ராகுல் தெவாட்டியா (10) ஆகியோரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

குஜராத்துக்கு உதிரிகளாக 12 ஓட்டங்கள் கிடைத்ததை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

பந்துவீச்சில் முக்கேஷ் குமார் 14  ஓட்டங்களுக்கு   3 விக்கெட்களையும் இஷாந்த் ஷர்மா 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

90 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 8.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 92 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஜேக் ப்ரேஸர் மெக்கேர்க், ப்ரித்வி ஷா ஆகிய இருவரும் 2 ஓவர்களில் 25 ஓட்டங்களை விளாசியிருந்தபோது ப்ரேஸர் மெக்கேர்க் 20 ஓட்டங்களுடன் முதலாவதாக ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து ப்ரித்வி ஷா 7 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இந் நிலையில் அபிஷேக் பட்டேல் (15), ஷாய் ஹோப் (19) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலப்படுத்தினர்.

அவர்கள் இருவரும் 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (67 - 4 விக்)

எனினும் ரிஷாப் பன்ட் (16 ஆ.இ.), சுமித் குமார் (9 ஆ.இ.) ஆகிய இருவரும் வெற்றிக்கு தேவைப்பட்ட எஞ்சிய ஓட்டங்களை இலகுவாக பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் சந்தீப் வாரியர் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024க்கான ஐசிசி டெஸ்ட் அணியில் கமிந்து...

2025-01-24 17:21:02
news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் புதுமுகம் சொனால்...

2025-01-24 16:49:52
news-image

2024ஆம் வருடத்துக்கான ஐசிசி ஒருநாள் அணிக்கு ...

2025-01-24 15:25:27
news-image

2024க்கான ஐசிசி மகளிர் ஒருநாள் அணியில் ...

2025-01-24 15:07:41
news-image

இந்தியாவிடம் 60 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது...

2025-01-23 16:18:23
news-image

மலேசியாவை வீழ்த்தி சுப்பர் சிக்ஸ் தகுதியைப்...

2025-01-23 12:37:13
news-image

வருண் துல்லிய பந்துவீச்சு, அபிஷேக் அபார...

2025-01-23 12:01:09
news-image

இலங்கை , நடப்பு சம்பயின் இந்தியா...

2025-01-23 00:30:48
news-image

மென்செஸ்டர் கால்பந்தாட்ட பயிற்சியகத்தின் ஏற்பாட்டில் இலங்கையில்...

2025-01-22 23:23:16
news-image

19இன் கீழ் மகளிர் ரி20 உலக்...

2025-01-22 19:40:49
news-image

எம்.சி.ஏ. - சிங்கர் சுப்பர் பிறீமியர்...

2025-01-21 20:30:52
news-image

19இன் கீழ் மகளிர் டி20 உலகக்...

2025-01-21 19:42:42