மனைவி உயிரிழந்ததையடுத்து தனது 17 வயது மூத்த மகளை 5 வருட காலமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் தந்தை இங்கிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவரது மனைவி 6 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும் இதனையடுத்து இவர் தனது மூத்த மகளை சுமார் 5 வருட காலமாகப் பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபருக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் அவர் தனது இரண்டாவது மகளையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற போது அதனைக் கண்ட மூத்த மகள் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனது இரண்டாவது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபருக்கு எதிராக அவிசாவளை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர் குறித்த வழக்கு தொடர்பில் நீதிமன்றில் ஆஜராவதைத் தவிர்த்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், சந்தேக நபரின் ஒரு பிள்ளை சுகயீனமடைந்துள்ளதுடன் சுகயீனமடைந்த பிள்ளையை தன்னால் பராமரித்துக் கொள்ள முடியாததால் இவர், தனது பிள்ளையை உயிரிழந்த மனைவியின் சகோதரியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் வீட்டின் உரிமையாளரான உயிரிழந்த மனைவியின் சகோதரி மூன்று பிள்ளைகளையும் இங்கிரிய பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM